|

பேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள்
கண்டுபிடிப்பு
எலக்ட்ரிக் சார்ஞ் இன்றி பேசினாலே பேட்டரியில்
சார்ஜ் ஏறும் புதிய மொபைல்களை தென்கொரிய
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும்
ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி மொபைலின்
பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது.
மேலும் மொபைலில் பேசுபவரை சுற்றி கேட்கும்
சப்தம்,
இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகை
மொபைல்களில் சார்ஜ் ஏற்றலாம்.
சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங்
வூகிம் என்பவர் இத்தகைய
மொபைலை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராஃப் என்னும்
நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது.
மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள
ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி
மொபைல் போன்களின் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுவது
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும்
சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும்
இத்தகைய மொபைல்கள் தானாக சார்ஜ்
ஏற்றப்படுகின்றன
|