|

பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி
கண்டுபிடிப்பு
இந்நிலையில்,
பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர
எரி கற்களை
சோதனையிட்டதில்,
அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித
பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை,
நாசா விஞ்ஞானி டாக்டர்
ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.
பூமியில் எப்படி மனித வாழ்க்கை
துவங்கியது என்பதை,
நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள
பூமியின்
அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை
விவரித்துவிடும் என்று ஹூப்பர்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர்
தெரிவித்திருப்பதாவது: அண்டார்டிகா,
சைபீரியா,
அலாஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரி கற்கள்
வித்தியாசமானவை. இந்த
நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான்
பார்த்தது இல்லை. இங்கு கிடைத்த
நட்சத்திர எரி கற்களில் ஒன்பது தான் பூமியில் உள்ளது.
பூமிக்குள் மட்டும்
மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை. பூமிக்கு
வெளியேவும் மனித வாழ்க்கை
தொடர்கிறது என்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு
நடக்க வாய்ப்பில்லை என்று பல
விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக,
பூமியில் வாழும் மனித இனத்துடன் நட்சத்திர
எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள்
தொடர்புடையவை என்பது தான்.
நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி
பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க
முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம்
கருத்து
கேட்டேன். ஆனால்,
அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. இவ்வாறு
ஹூப்பர் தெரிவித்துள்ளார். இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின்
அமைப்பு பற்றிய
விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக
அளவில் இருந்து ஐந்தாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
|