Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

 முன் பக்கம்   கண்டுபிடிப்புகள்   அதிசயங்கள்

 கண்டுபிடிப்புகள்

 

காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை, கோவை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, காரின் விலை அதிகம், சுற்றுச் சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இது குறித்து பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் மதன்குமார் (21) கூறியதாவது,

நானும், என்னுடன் இயந்திரவியல் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் நசியனூரைச் சேர்ந்த பூர்ணசந்திரன், பேரூரைச் சேர்ந்த ஆனந்தன், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேந்தர் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமன்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம்.

இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச் சூழல் மாசுபடுவதுதான். மாசுபாட்டை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இதற்காக காற்றில் இயங்கும் மிகக் குறைந்த விலையில் கார் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தொடங்கினோம்.

இதற்கு கல்லூரி பேராசிரியர் திருப்பூர் நாகராஜன் மிகவும் உறுதுணையாக இருந்தார். 3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ணீ 35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு காரை வடிவமைத்தோம்.

இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய தாங்கி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று என்ஜினை இயக்குவதன் மூலம் கார் செல்லும்.
வழக்கமான கார்களைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகையும் வராது, சுற்றுச் சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு சைக்கிள் கடையில் நிறுத்தி காரின் தாங்கியில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம்.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved