|

170
ஆண்டுகள் பழமையான பீர் கண்டுபிடிப்பு
பால்டிக் கடல் பகுதியில் உள்ளது அலாண்ட்
என்னும் தீவு. சுமார்
170
ஆண்டுகளுக்கு முன் இந்த தீவுக்கு அருகில்
கப்பல் ஒன்று மூழ்கிப்போனது.
உடைந்து போன கப்பலுக்குள் இருந்து உலகின் மிக
பழமையான பீர் பாட்டில்
ஒன்றை பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தனர். துரதிர்ஷ்டவசமாக,
கடல் நீர் பாட்டிலுக்குள் எப்படியோ
புகுந்திருந்ததால் பீர்
கலப்படமாகிப்போனது. தற்போது பீர் தயாரிக்க
பயன்படுத்தப்படும் பொருட்களும்,
முறைகளுமே இந்த பழைய பீரிலும் காணப்பட்டாலும்
ஈஸ்ட் பயன்படுத்தப்படவில்லை
என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த
வகை பீரை எப்படி தயார்
செய்வது என்பது தெரியாமல் அவர்கள்
குழப்பத்தில் உள்ளனர்
|