Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

 முன் பக்கம்   கண்டுபிடிப்புகள்   அதிசயங்கள்

 கண்டுபிடிப்புகள்

 

 

 

 

 

 

 

மனிதன் அழிந்தபின்னரும் அழியாத விசித்திர விலங்குகள்: விஞ்ஞானிகள் கணிப்பு!

             பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன் விலங்கினங்கள் தோன்றி வாழ்ந்து வந்தன.இது தெரிந்ததுதான்.ஆனால் பிரளயம் இயற்கைச் சீற்றம் என்று ஏதாவது காரணத்தினால் இந்த உலகம் அழிந்தாலும் கூட சில விலங்குகள் மிச்சமிருக்கும்என்கிறார்கள் விஞ்ஞானிகள்! பூமியின் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதில் மனித இனம் இருக்கப் போவது மிகக் குறுகிய காலம்தானாம்.அடடா நம் கதை முடிஞ்சுபோச்சா?”என்று பயப்படத் தேவையில்லை.இன்னும் சில கோடி வருடங்களுக்கு பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.அதனால் நாமும் சௌக்கியமாக இருக்கலாம்.

சுமார் ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகுதான் பூமியில் மனிதன் இருக்கமாட்டான்.ஆனால் விசித்திரமான புது வகையான மிருகங்கள் நிச்சயமாக உலாவிக்கொண்டிருக்கும் என்கிறார் பூமி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் சைமன். அந்த விசித்திர மிருகங்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இவர் தலைமையிலான ஆய்வு கற்பனை செய்து வைத்திருக்கிறது.அந்தக் கற்பனை உருவங்களைப் பார்த்தால் முதலில் சிரிப்பு வரும்.பின்னர் அலறுவீர்கள்!

ஐந்துகோடி வருடங்களுக்குப் பிறகு இன்றுள்ள முயல்கள் ஆறடி உயரம் இருக்குமாம். நீண்ட கால்களுடன் பார்ப்பதற்கு அருவருப்பாகக் காட்சியளிக்குமாம்.பாம்புகளின் குறைந்த பட்ச நீளம் முப்பது அடியாம்.மேலும் அவை யாரையும் கொத்தத் தேவையில்லையாம்மாறாக விஷத்தை ஐம்பது அடி தூரம்வரை பீய்ச்சியடித்து எதிரிகளைக் கொல்லும் வல்லமை பெற்று இருக்குமாம்.ராட்சத அணில்கள் தங்கள் வாலை பாராசூட் போல பயன்படுத்தி மரத்துக்கு மரம் தாவுமாம்.மான்களோ தோற்றத்தில் காண்டாமிருகம் போல காட்சியளிக்குமாம்.அது போன்ற விலங்குகளுக்குநைட் ஸ்டார்க்கர் என்று இப்போதே பெயரும் வைத்து விட்டனர்.

அந்த விலங்குகள் உள்ள பூமியில் மனிதனால் சில நிமிடம்கூட உயிருடன் உலவ முடியாது.ஒருவேளை மனிதன் வேற்றுக் கிரகத்தில் குடியேறி அங்கிருந்து பூமிக்கு செயற்கைக் கோள் அனுப்பினால் இந்த விலங்குகளின் அட்டகாசத்தை அவன் வானில் இருந்தபடி பார்த்து மிரளலாம்!என்று சிரிக்கிறார் சைமன்

 

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved