|

15
கொம்புகள் கொண்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளை கண்டுபிடிப்பு
பல்லாயிரம்
கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய
உயிரினம் டைனோசரஸ். இயற்கை
பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம்
போன்றவற்றின் காரணமாக அந்த இனம் உலகில்
அழிந்து விட்டது.
ஆனால் அவை வாழ்ந்த அடையாளங்கள் காலச்சுவட்டில்
இருந்து
மறைந்து
விடவில்லை.
உலகில் வாழ்ந்து மடிந்த டைனோசரஸ்சின்
படிவங்கள் உலகின்
பலபகுதிகளிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அரியவகை டைனோசரஸ்கள்
வாழ்ந்ததற்கான ஆதாரம்
அமெரிக்காவில் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உதா பகுதியில் புதை பொருள்
ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோன்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வினோதமான
அரிய வகை விலங்குகளின்
2
ராட்சத எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
அதில் முகதாடையின் முன் புறத்தில் காண்டா
மிருகத்தை போன்ற ஒரு கொம்பு
இருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில்
3
கொம்புகளும்,
முதுகெலும்பில்
மற்ற
11
கொம்புகளும் ஆக மொத்தம்
15
கொம்புகள் இருந்தன.
எனவே அந்த அரிய விலங்கின் எலும்பு கூடுகள்
பரிசோதனைக் கூடத்தில் வைத்து மேலதிக
பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
அவையும் டைனோசரஸ் வகையை சார்ந்தது என
கண்டறிந்தனர். அது வாழ்ந்த போது
5
மீட்டர் நீளமும்,
2500
கிலோ எடையுடனும் இருந்திருக்க வேண்டும் என
விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் உதா மியூசியத்தின் ஆய்வகத்தில்
இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனை நடந்து
வருகிறது
|