நமக்கு பின் என்ன
பேசுவார்களோ?’ என்ற நினைப்பு எல்லாருக்கும்
உண்டு. இனி இதை நினைத்து கவலைப்பட தேவையில்லை.
‘பின்னால்’ நடப்பதையும்
காட்டும் கேமரா விரைவில் அறிமுகமாகிறது.
ஈராக்கை சேர்ந்த போட்டோகிராபி மற்றும் இமேஜ்
துறை துணை பேராசிரியர் வபா பிலால் தலைமையில்
நியூயார்க் பல்கலைக்கழகத்த்தில் சமீபத்தில்
ஒரு ஆய்வு நடந்தது.
ஆராய்ச்சி பற்றி பிலால்
கூறியதாவது:
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவிக்கு
‘தேர்ட் ஐ’ (மூன்றாவது கண்) என்று
பெயரிட்டுள்ளோம். கட்டை விரல் நகம் சைஸில்
உள்ள மைக்ரோ கேமராவை தலையின் பின்பக்கம் லேசாக
துளையிட்டு பொருத்த வேண்டும். இது நம்
பின்னால் நடக்கும் அனைத்து செய்கைகளையும் படம்
பிடிக்கும். ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை
நிகழ்வுகளை இது பதிவு செய்து கொள்ளும்.
அனைத்து காட்சிகளும் தொடர்ந்து பதிவு
செய்யப்படும். தேவைப்படும் நேரத்தில்
இக்காட்சிகளை பார்க்க முடியும். முடி
பகுதியில் கேமரா பொருத்தியிருப்பது தெரியாமல்
இருக்க கருப்பு நிறத்தில் ‘லென்ஸ் மூடி’
பொருத்தப்படும். இவ்வாறு பிலால் கூறினார்.
பேராசிரியர் பிலாலுக்கு இந்த கேமரா டிசம்பர்
15ம் தேதி பொருத்தப்பட உள்ளது. இதன் வெற்றியை
பொருத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
முக்கிய தலைவர்கள், விஐபிக்களுக்கு ‘தேர்ட் ஐ’
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அசம்பாவிதங்களின் பின்னணியை கண்டறிவது,
பாதுகாப்பு பணிக்கு பயன்படுத் துவது என
பின்னந்தலை கேமராவின் பயன்களை பட்டியலிட
முடியும் என்கிறார் பிலால்.
|