
ஒன்றாக தூங்கும் மனிதனும் சிங்கமும்
சிங்கமும் மனிதனும் ஒன்றாக படுத்துத்
தூங்குகின்றமையை நீங்கள் கண்டு
இருக்கின்றீர்களா?
நாங்கள் காட்டப் போகின்ற மனிதன்,
சிங்கம் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள்.
நண்பனுக்கு மேல் உடலை சாய்த்துக் கொண்டு
தூங்குகின்றமையில் இன்பம் காண்கின்றது
இச்சிங்கம்.
அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் உள்ள
மிருகக் காட்சிச்சாலை ஒன்றில்தான் இந்த
அதிசயம் நிகழ்கின்றது.
இது ஒரு பெண் சிங்கம். பெயர் சான்ரா.
சான்ராவின் நண்பனின் பெயர் ஸ்ரிவ் க்ளெய்ன்.
ஸ்ரிவ் க்ளெய்ன் இம்மிருகச்க்
காட்சிச்சாலையில் வேலை பார்க்கின்றார்.
சான்ராவின் நலன்களை பேணி வருகின்றார்.
|