
உலகில் மிகவும் விலை உயர்ந்த நாய்!
அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்பர்;
ஆனால்,
உங்களிடம் நான்கு
கோடி ரூபாய் இருந்தால்,
நல்ல,
“நண்பனை’
விலைக்கு வாங்க முடியும். ஆம்…
கோடீஸ்வரர் ஒருவர்,
நான்கு கோடியே,
25
லட்சம் ரூபாய் கொடுத்து,
நாய் ஒன்றை
விலைக்கு வாங்கியுள்ளார். உலகிலேயே,
மிகவும் விலை உயர்ந்த நாய் இதுதான்.
மிகவும் அடர் சிவப்பு நிறம் கொண்ட,
திபெத்திய மஸ்திப் இன வகையைச் சேர்ந்த
இந்த நாயின் பெயர் ஹாங்டாங். வடக்கு சீனாவில்,
நிலக்கரி சுரங்க உரிமையாளர்
ஒருவர்,
நான்கு கோடியே,
25
லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த
நாய்,
தினமும் கோழி,
பன்றி இறைச்சிகளைத்தான் சாப்பிடும்.
இந்த நாய் வசிப்பதற்கு என்றே,
தனி வீடு ஒன்றை இதன் உரிமையாளர்
கட்டியுள்ளார். பிறந்து, 11
மாதமே ஆன இந்த நாய்,
கொழு,
கொழுவென உள்ளது.
இந்த நாயை பராமரிப்பதற்காக,
தனிக் குழு ஒன்றை,
இதன் உரிமையாளர்
ஏற்படுத்தியுள்ளார். அவர்களுக்கு சம்பளமே
மாதத்திற்கு நான்கு லட்சம் ரூபாய்
செலவாகிறது.
கம்யூனிச நாடான சீனா,
இப்போது கொஞ்சம்,
கொஞ்சமாக முதலாளித்துவ நாடாக மாறி
வருகிறது. பெரும் கோடீஸ்வரர்கள்
உருவாகியுள்ளனர். பெரிய,
பெரிய கார்கள்,
பங்களாக்கள் போன்றவை அவர்களின் சமூக அந்தஸ்தை
காட்டுவதாக முன்பு இருந்தது;
இப்போது,
விலை உயர்ந்த திபெத்திய நாய்
வைத்திருப்பவர்கள் தான் பெரும்
கோடீஸ்வரர்கள் என கருதப்படுகின்றனர்.
இந்த சிவப்பு நிற நாய்,
மிகவும் அதிர்ஷ்டமானதாக சீனாவில்
கருதப்படுகிறது.
இந்த வகை நாய்களை வைத்திருக்கும்
உரிமையாளர்கள்,
மிகவும்
செல்வந்தர்களாகவும்,
ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பர் என்ற
நம்பிக்கையும்
சீனாவில் உள்ளது.
விக்டோரியா அரசி,
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்,
செங்கிஸ்கான் போன்ற பிரபல
மன்னர்கள்,
இதே போன்ற நாய்களை வளர்த்தனர். இங்கிலாந்து
நாட்டில்,
இப்போது,
இதே போன்ற திபெத் வகை நாய்கள் வெறும்,
300
மட்டுமே உள்ளன. அதன் குட்டி
நாய்கள்,
75
ஆயிரம் முதல்,
ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.
இதற்கு முன்,
அதிக விலைக்கு விற்கப்பட்ட நாயும்,
இதே திபெத் வகையைச்
சேர்ந்ததுதான்;
அதன் பெயர்,
சிவப்பு சிங்கம். அந்த நாய்,
நான்கு கோடி
ரூபாய்க்கு விற்பனையானது.
அதெல்லாம் சரி…
இந்த அளவு விலை கொடுத்து நாயை வாங்கினால்,
என்ன லாபம் என்று
கேட்கிறீர்களா?
இந்த ஆண் நாய்,
ஒவ்வொரு முறையும்,
அதே இனத்தைச் சேர்ந்த
பெண் நாயுடன் கூடும் போது,
அதற்கு,
10
லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து
விடுவாராம் இதன் உரிமையாளர்.
|