|

உலகின் மிகப்பெரிய கைவிரல்
சீனாவின்
ஜியாங்ஸூ (Jiangsu)
நகரில்
24
வயதான லியு ஹுவா (Liu
Hua)
தான் உலகிலே
பெரிய கையை உடையவர் என சாதனை படைத்துள்ளார்.
பிறக்கும் போதே இவரது இடது
கையின் பெருவிரல் ஆட்காட்டி விரல் மற்றும்
நடுவிரல் சாதாரண அளவைவிட சற்று
பெரிதாகத்தான் இருந்தன. அவர் வளர வளர கூடவே
விரல்களும் வேகமாக வளர்ந்தன.
இதனால் இவருக்கு வேலை மற்றும் அன்றாட அலுவல்களை
செய்வதற்கு சிரமமாக உள்ளது.
இப்போது அவரது இடதுகை பெருவிரலின் நீளம்
26
சென்டி மீட்டர்,
ஆட்காட்டி
விரல்
30
சென்டி மீட்டர் மற்றும் நடுவிரல்
15
சென்டி மீட்டர் அளவுக்கு
வளர்ந்துள்ளன.
இதனால் இவரது இடதுகையின் எடை
10
கிலோவாக
உள்ளது. இதுதான் உலகிலேயே பெரிய கை,
ஆனால் அதை வைத்திருப்பதற்கு
சிரமப்படும் ஹுவாவுவின் சிரமத்தை குறைக்க
சத்திர சிகிச்சை மூலம் கையை
சிறிதாக்க டாக்டர்கள் முன்வந்தனர்.
7
மணி நேர சத்திர சிகிச்சையின் பின்
10
கிலோ கை இப்போது 5
கிலோவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. எனினும் சத்திர
சிகிச்சை இன்னும் முழுதாக முடியவில்லை
6
மாதங்களில் ஹுவா மீண்டும்
ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். அது வரை வீட்டில்
பயிற்சி செய்ய வேண்டுமென்று
கூறப்பட்டுள்ளது. கையின் பாரம் குறைந்ததில்
இவர் மன பாரம் சற்று
குறைந்துள்ளது.
|