Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

 முன் பக்கம்   கண்டுபிடிப்புகள்   அதிசயங்கள்

 அதிசயங்கள்

 

 

 

சோபாவைத் தின்னும் விநோதப் பெண்

 

அடில் எட்வார்ட் என்னும் 31 வயதுப் பெண் தனது வீட்டில் இருக்கும் சோஃபாப் பஞ்சினை கடந்த 21 ஆண்டிகளாக தினமும் தின்று வந்துள்ளார்.

 

அவர் பத்து வயதாக இருக்கும் போது இப்படி சோஃபா பஞ்சினை தின்னும் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. சிறுவயதாக இருக்கும் போது விளையாட்டாக சோஃபாப் பஞ்சினைத் தின்றுள்ளார். ஆனால் அன்று முதல் சோஃபா பஞ்சைத் தின்ன வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டதாம். அன்று முதல் சோஃபா பஞ்சினை யாருக்கும் தெரியாமல் தின்று வந்துள்ளார் அடில். மூன்று ஆண்டுகளுக்கு முன் நடு இரவில் கடும் வயிற்று வழியால் விழித்த அவர், கொஞ்ச நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்துப் போனார்கள். மருத்துவர்கள் அடிலில் அடிவயிற்றில் எதோ ஒன்று அடைத்து இருப்பதை அறிந்து அவற்றை நீக்க ஆறு நாள்கள் முயன்றனர். பின்னர் கடுமையான வயிற்றுப் போக்கு மருந்தினைப் பருக்கி அவரின் வயிற்றில் இருந்தவற்றை வெளியேற்றினார்கள். அதனைப் பரிசோதித்த அவர்கள் அவை யாவும் சோஃபா பஞ்சு என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

அடிலுக்கு பிக்கா என்னும் நோய் தாக்கி இருந்துள்ளது. பெரும்பாலும் கர்ப்பந்தரிக்கும் பெண்களுக்கும், சிறுக் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படும் போது சாம்பல், சால்க், சோப்பு, பாட்டரி போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்று தோன்றுமாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்நோய் தாக்குமாம்.

அடிலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஐந்து வயது இருக்கும் போது அவரதுப் பெற்றோர் விவாகரத்துப் பெற முடிவு செய்திருந்தனராம். அதனால் சிறுவயதாக இருந்த அடிலுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டதாம். இதனால் சோஃபா பஞ்சினை தின்ன வேண்டும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டதாம். அதேப் போல அவரது இரத்தத்தினை பரிசோதித்த போது அவருக்கு இரும்புச் சத்துக் குறைப்பாடுத் தெரியவந்துள்ளது.

 

இன்று அடிலுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளித்து வருகின்றனர். சோஃபா பஞ்சினை தொடர்ந்து சாப்பிட்டால் அது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதையும் அறிவுறுத்தி வருகின்றார்கள். இத்தனை ஆண்டுகள் அடில் சோஃபாவை தின்று வருவது அவரது குடும்பத்தில் அவரது கணவன் உட்பட யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved