|

கையில்
12,
காலில் 14
விரல்களுடன் பெண்
குழந்தை!
மியான்மரில் ஒரு பெண் குழந்தை கையில்
12
விரல்களுடனும்,
காலில்
14
விரல்களுடனும் பிறந்துள்ளது. இதன்மூலம்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. மியான்மரைச்
சேர்ந்த பெண்
பியோ மின்மின் சோ (26).
இவருக்கு லீ யதி மின் என்ற பெண் குழந்தை பிறந்தது.
வழக்கத்துக்கு மாறாக இந்த குழந்தையின்
கையில் 12
விரல்களும்,
காலில் 14
விரல்களும் உள்ளன. பிறந்து
16
மாதமாகி
உள்ள இந்த குழந்தையின் குடும்பம் வறுமை
நிலையில் உள்ளது.
எனக்கு குழந்தை பிறந்தவுடன்,
கை,
கால்களுடன் குறையின்றி பிறந்துள்ளதா?
என நர்ஸ் இடம் கேட்டேன். அதற்கு,
தேவைக்கும் அதிகமாகவே உள்ளது என நர்ஸ்
பதில் அளித்தார். கூடுதல் விரல்களுடன் பிறந்ததைப் பற்றி நான்
கவலைப்படவில்லை. இது அவளுக்கு கூடுதல் பலம் என பியோ
தெரிவித்துள்ளார்.
பியோ,
தனது குழந்தையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டி
விண்ணப்பித்துள்ளார். இப்போதைக்கு இந்தியாவைச்
சேர்ந்த இருவர்,
தலா 12
கை
விரல்கள் மற்றும்
13
கால் விரல்களுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில்
இடம்பெற்றுள்ளனர்.
கூடுதல் விரல்களுடன் குழந்தை பிறப்பது
பாலிடக்டிலிசம் எனப்படுகிறது. இது
வழக்கத்துக்கு மாறானது. அதிலும், லீயைப்
போல கை,
கால்களில் கூடுதலாக உள்ள
அனைத்து விரல்களும் செயல்படுவது மிகவும் அரிதானது என டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.
|