|

புலம்பெயர் மண்ணில் தாய்மொழிக்கல்வியும்
தமிழ்ச்சிறார்களும்
தம்பி
தமிழ்ப்பள்ளிக்கூடத்துக்குப் போகவேணும்
எழும்புங்கோ”அம்மாவோ
அப்பாவோ காலையில் நித்திரையால் எழுப்பும்போது
‘அம்மா
எனக்குச் சரியா வயித்துக்க குத்துதம்மா நான்
தமிழ் படிக்கப் போகயில்’
சின்னம் சிறு சிறார்களின் பதில்
இப்படியாகத்தன் இருக்கின்றது.உண்மையில்
அவனுக்கு வயிறு வலிக்கவில்லை. தமிழ்
படிப்பதென்றால் மனம் வலிக்கின்றது.
இப்படியெல்லாம் ஏன் நடக்கின்றது என்பதை நாம்
சிந்திப்பதில்லையா?
அல்லது சிந்திப்பதற்கு எமக்கு நேரம் இல்லை?
தாய்மொழி
என்பது தாய்ப்பாசத்துடன் அரவணைத்துப்
பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டியதொன்று எவரும்
மறந்து விடக்கூடாது. புலம்பெயர் மண்ணில் அது
மிகவும் அத்தியாவசியம் ஆகின்றது. தமிழ்
ஆசிரியை,
அன்றேல் ஆசிரியரைப் பார்க்கும் போது
பிள்ளைக்குப் பாச உணர்வு ஏற்படவேண்டுமே தவிர
காட்டில் வாழும் கொடிய மிருகம் ஒன்றைப்
பார்க்கும் பயஉணர்வு
பிள்ளைக்குத்
தோன்றக் கூடாது. பயமோ கவலையோ இருந்தால் பிள்ளை
கற்கும் திறனை இழந்து விடுகின்றனர்.எனவே
ஆசிரியர்கள் அன்போடும் பாசத்தோடும்
கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆரம்பக்
கல்வியை நாம் கொடுக்கும்போது எழுது எழுது எனப்
பிள்ளைக்கு அழுத்தங்களைப்பிரயோகிப்பதோ அன்றேல்’
அங்கபாரு
அவனும்
உன்ர
வயசுதானே அவன் எப்படி எழுதுகிறான்
உனக்குத்தான் மண்டைக்க மூளையே இல்லை’
இப்படி பட்ட ஒப்பீடுகள் பிள்ளையின் அறிவை
வளர்ப்பதற்கு பதிலாக ஆத்திரத்தையும்
பொறாமையையும் வளர்ப்பதற்கு ஏதுவாகின்றது
என்பதை பெற்றோர்கள உணரத்தவறிவிடுகின்றனர்
என்பதே எனது கருத்தாகும். குழந்தைகள்
எல்லோரும் ஒரேமாதிரித்தான் இருப்பார்கள் என்று
நாம் தப்பாகக் கணக்குப் போட்டுவிடக் கூடாது.
ஆவர்கள் வித்தியாசமானவர்களாகத்தான்
இருப்பார்கள். அவர்கள்
பூக்களைப் போன்றவர்கள். மலர்கள் அனைத்தும்
ஒரேமாதிரி இருப்பதில்லையே. பெரும்பாலான
குழந்தைகள் கதை கேட்பதில்
ஆர்வம்காட்டுவார்கள். நன்றாகக் கிரகிக்கும்
திறமையும் அவர்களிடம் இருக்கும். ஆனால்
எழுவதில் ஆர்வம்காட்ட மாட்டார்கள். ஆனால்
நன்றாகக் கதைப்பார்கள. அவர்கள் வழியில் சென்றே
நாம் அவர்களுக்க தாய் மொழிக்கல்வியைப் போதிக்க
முடியும். அவர்கள மனம்திறந்து கதைப்பதற்குத்
தாராளமாக நாம் சந்தர்பம் கொடுக்க வேண்டும்.
அதன்பின் அவர்கள் எழுதிப்பழக முன்வருவர்கள்.
இலகுவான சொற்களை அவர்களுக்கு இறுக்கமின்றிக்
கொடுத்துப் பாருங்கள். தானகவே அவர்கள்
தாய்மொழிக் கல்வியை கற்பதில் ஆர்வம்
காட்டுவர்கள். பிள்ளைகளுக்கு நாம் பிரத்தியோக
அதிக பாடங்களைக் கற்பிக்க முணையும்போதும்
அவர்களுக்கு கல்வியில் வெறுப்பு ஏற்படுகிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
ஆதைப்பெற்றோர்கள் உணர்வதில்லை.
பிள்ளை
போதிய அளவு மதிப்பெண்கள் எடுத்தால்
பிள்ளைக்குப் பிரத்தியேகக் கல்வி தேவையே
இல்லை. அளவுக்கு மிஞ்சி உரமிட்டால் செடிகள்
பயன் தராது வாடத்தான் செய்யும். அதே
போன்றுதான் பிரத்தியோகக்
கல்வித் திணிப்பு பிள்ளைகள் மனத்தைப்
பாதிப்படையச் செய்கின்றது.
பிள்ளைகளின
ஓய்வு நேரத்தை நாம் திருடிக் கொள்கின்றோம்.
பிரத்தியேகக்
கல்வி என்னும் போர்வையில். அதனால் பூப்போன்ற
அவர்கள் மனம் வதைபடுவதை நாம் உணரத்
தவறிவிடுகின்றோம். இந்த நிலையில்
ஆசிரியர்களும் கண்டிப்பு மிகுந்தவராக
இருந்தால் பிள்ளைகளுக்கு கல்விகற்கத்தான்
இங்கு வந்தோம் என்ற எண்ணம் தோன்றாது. எனவே
கல்வியானது அன்பேடு ஊட்டப்படவேண்டும்.
பிள்ளைகள் மகிழ்வோடு கற்கவேண்டும் அவர்கள்
அச்சமின்றி ஆசிரியர்களுடன் நட்புணர்வோடு உறவாட
வோண்டும. அவர்களின் மனநிலையைப் புரிந்து
கொண்டு அதற்கேற்ப ஆசிரியர் கற்பித்தல் முறையை
ஆரம்பிக்க வேண்டும்.
“அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டு
முகம். ”என்பதைத்
தெரிந்து கொண்டு அவர்களின் உணர்வைப் பகிர்ந்து
கொண்டு கற்பித்தல் மிகவும் சிறந்தது.
சுருங்கக் கூறின் மாதா,
பிதா,
குரு,
தெய்வம் என
எமது
முன்னோர்களின்
கூற்றுக்கிணங்க,
ஒரு ஆசிரியர் தாயாகயுவம் தந்தையாகயும
தெய்வமாகயும்தான் பிள்ளைக்குத்
தோன்றவேண்டும். அப்போதுதான் பிள்ளைகள
தாய்மொழிக்கல்வியைத் தாமாகவே முன்வந்து
கற்றுக் கொள்வார்கள என்பது அசைக்க முடியாத
உண்மை. இதற்கு முக்கியமாகப் பெற்றோர்களின்
ஒத்துழைப்பு அவசியமாகும். இதைவிடுத்து
‘நீ
குழப்படி செய்தால் உன்னைத் தமிழ்ப்பள்ளிக்
கூடத்துக்கு அனுப்புவன் எனத்
தாய்மொழிக்கல்வியைப் பூதத்தைக் காட்டி
பயமுறுத்துவது போல் பிள்ளைகளைப் பயமுறுத்தாது
பாசத்துடன் கற்றுக் கொடுங்கள். தாய்மொழிக்
கல்வியை உள்வாங்கும் உங்கள் குழந்தை உலக
மொழிகள் அனைத்தையும் இலகுவாக உள்வாங்கி
கல்வியில் நீங்கள் நினைக்கும் இலக்கை
வெகுசுலபமாக எட்டிப் பிடித்து விடுவான் என்பது
நிதர்சனமான அனுபவம் கண்ட உண்மை.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
என்ற வள்ளுவன் வாக்கின் படி உங்கள் குழந்தை
சந்தேகம் இன்றித் தெளிவுறக் கல்வியைக் கற்று
கற்றதன்படி ஒழுக என் இதயம் நிறைந்த நல்
வாழ்த்துக்கள்.
திருமதிஅம்பிகா இராஜலிங்கம்
கண்ணகி கல்விநிலையம்
சூரிச் சுவிஸ்
Home |