பூலோகத்தின் சொர்க்கம் - மலேசியா
எங்கும் தூசுப்படலம்;
தெருக்களில் வாரி இறைத்த குப்பை;
ரோட்டில்
வாகனங்களின் பேரிரைச்சல்;
வாகன நெரிசலில் நீந்திக் கடக்க
“ஹாரன்
அடித்து
நொந்து போன மனம்…பிரச்னைகளில்
சிக்கித் தவிக்கும் எண்ணங்கள்…
இவற்றிலிருந்து விடுதலை கிடைக்குமா…என
ஏங்கி தவிப்பவரா…
நீங்கள்?
வசதியும் வாய்ப்பும் கிடைத்தால்,
மலேசியாவை எட்டிப்பார்த்து விட்டு
வாருங்கள். எங்கும் பசுமை;
எதிலும் பசுமை;
கண்களுக்கு குளுமை;
தூசுகளுக்கு
குட்பை.
99.9
சதவீதம்,
நோ ஹாரன்…நேர்த்தியான
ரோடுகளில் விரைவாக செல்லும்
லாவகம். பூலோகத்தின் சொர்க்கத்திற்கு வந்து
விட்டோமோ என எண்ணத் தோன்றும்
சில விநாடிகள்.சலாமத் டடாங் என வரவேற்புடன்,
இனிமையான கனிவான மலேசிய
ஏர்லைன்ஸ் விமான சேவை. விருந்தோம்பலை
முன்னிறுத்தி,
கனிவான பேச்சில்
கவர்கிறது.
விமான நிலையத்தை தொடும்போதே,
பிரமாண்டத்தை கொட்டிக்காட்டுகிறது
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்.
60க்கும்
மேற்பட்ட நாடுகளுக்கு விமான
சேவை செய்து வருகிறது. இன்னும் விரிவாக்கம்
செய்து கொள்ள
10
ஆயிரம் எக்டேர்
நிலப்பரப்பை கொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும்
அடர்ந்த வனப்பகுதியில் விமான
நிலையம் இருக்கும்.
ஆனால்,
இங்கோ விமான நிலையத்தில் வனத்தை
உருவாக்கியுள்ளனர். நாடு முழுவதும்
சுற்றி வாங்க நினைக்கும் பொருட்களை இங்கேயே
வாங்கிக் கொள்ளலாம். விமான
நிலையம் மட்டுமல்ல;
பெரிய ஷாப்பிங் சென்டரே உள்ளது.
நேர்த்தியாகவும்,
அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள கடைகள் ஏராளம்.
சர்வதேச அளவில் எந்த உணவாக
இருந்தாலும் அதுவும் விமான நிலையத்திலேயே
கிடைக்கும். வந்து செல்லும்
பயணிகளின் விரைவுக்கு ஏற்ப ஆங்காங்கே லிப்ட்,
தானியங்கி ஏணிப்படிகள்
(எலிவேட்டர்)
வசதிகள் உண்டு. புத்தம் புதியது போன்று
எப்போதும் மின்னுகிறது
விமான நிலையம்;
அவ்வளவு சுத்தம்.மலேசியாவுக்குள் நுழைந்து
விட்டாலே…
பிரமாண்டங்களை காண முடியும்.
ரோட்டில் செல்லும்போதே இருபுறமும் பசுமையை
கண்குளிர காணலாம். ரோடுகள்
சுத்தமாகவும்,
நேராகவும்,
அகலமுள்ளதாகவும் உள்ளன.ரோட்டில் பயணிக்க
ஆசையும்
ஆர்வமும் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு
வாகனங்களுக்கும் இடைவெளி இருக்கும்.
முடிந்தவரை ரோடுகளின் குறுக்காக ரோடு அமைவதை
தவிர்த்துள்ளனர். தேவையான
இடங்களில் சிக்னல்களை அமைத்துள்ளனர். டிராபிக்
போலீசையும் கூட காண்பது
அரிது. ரோடுகளை கடப்போருக்கு உரிய மரியாதை
கொடுக்கின்றனர் வாகன
ஓட்டுனர்கள். வாகனத்தில் செல்வோர் பொறுமையை
கையாள்வது வியப்பிற்குரியது.
விமான நிலையத்திலிருந்து
20
நிமிட பயணத்தை அடுத்தே,
கோலாலம்பூரை தொட
முடியும். நகருக்குள் நுழைந்ததுமே கோலாகலம்
தொடங்கி விடும். அமைதியான,
அழகாக வடிவமைக்கப்பட்ட கோலாலம்பூரில் பார்க்க
வேண்டிய இடங்கள் நிறையவே
உள்ளன. மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகை
கொண்ட இந்த நாட்டில்,
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வியக்க
வைக்கின்றன. ஆட்சியாளர்களின்
திட்டமிடும் திறனும்,
அதை செயல்படுத்தும் வேகமும் நாட்டை வேகமாக
முன்னேற
வைத்திருக்கிறது. எப்போதும்,
என்றும் கட்டுமான பணிகள் தொடர்ந்து கொண்டே
உள்ளன.முன்னேறிய நாடுகளை பார்த்தால்,
அங்கு என்ன சிறப்பம்சம் இருக்கிறது
என்பதையெல்லாம் ஒவ்வொரு நாடாக சென்று பார்த்த
மலேயர்கள்,
அவற்றை தங்களது
நாட்டில் ஏற்படுத்த முனைந்துள்ளனர். உலகையே
சுற்றிப்பார்ப்பதும்,
மலேசியாவை
சுற்றிப்பார்ப்பதும் சமமாக கருதலாம்.
இந்திய,
சீனா,
மலேய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த
மக்களிடையே எவ்வித
இன பாகுபாடும் வேறுபாடும் கிடையாது;
ஒரே மலேசியா (1எம்)
என்ற உத்வேகம்
இவர்களிடையே உண்டு. வேகமாக முன்னேற்றங்கள்,
திட்டமிடலில் மட்டுமே
வந்துள்ளது. மலேசியாவின் பொருளாதாரம்,
விவசாயத்தின் அடிப்படையில் இருந்தது;
தற்போதோ தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது.
இன்ஜினியரிங் உற்பத்தி,
பெட்ரோலிய
ஏற்றுமதி,
சுற்றுலா,
விவசாயம் என முக்கிய வருவாய் தரும் இனங்கள்
உள்ளன.
மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்…
ஓரிரு நாட்களில்
எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட
முடியாது;
ஓரிரு மாதங்கள் வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட
வேண்டும்.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்: நகரின் நடுவே
உலகின் அதிசயம்…கோலாலம்பூர்
பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம். உலகிலேயே
உயரமான கோபுரம்.
451.9
மீட்டர்
உயரம் உள்ள இந்த கோபுரம்,
88
அடுக்குகளை கொண்டது.
41, 42வது
தளங்களில்,
இரு
கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த
பாலமே நில மட்டத்திலிருந்து,
557
அடி உயரத்தில் (170
மீ)
|