Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  சாதனைகள்

 சுற்றுலாதளங்கள்


 

 

ஜில்லென்று ஒரு பயணம் இலங்கை

 

பொதுவாக சுற்றுலா ஒன்றை முடிவு செய்யும் போது முதலில் அநேக மேலை நாட்டவருக்கு
நினைவுக்கு வருவது இலங்கை. அதற்கு பல காரணங்கள் மிக முக்கிய காரணம் செலவு,
இலங்கைக்கு சுற்றுலா செல்வது மிகவும் செலவு குறைந்த திருப்தியான பயண
அனுபவத்தைக் கொடுக்கும். மேலதிக சிறப்பம்சம் அங்கு காணப்படுகின்ற இயற்கை
வளங்கள்,.
கடற்கரைகள்
மலைப் பிரதேசங்கள்
சமவெளிகள்
இயற்கை காடுகள்
இயற்கை துரைமுகங்கள்
புராதன சின்னங்கள்
பௌத்த இந்து ஸ்தலங்கள்
என சின்னஞ்சிறிய நாடு முழுக்க நிறைந்து கிடக்கும் சுற்றுலாத் தளங்கள்.
மேலும் இலங்கையில் பயணங்களுக்கான நேரமும் மிகக் குறைவு. அதற்கான போக்குவரத்து
வசதிகளும். தங்குமிட வசதிகளும் அரசினாலும் தனியாரினாலும் அதி உயர் சேவைகள்
வழங்கும் வகையில் ஏற்படுத்தப் பட்டுள்ளமை சிறப்பாகும்.
*கண்டி *
அழகிய மலைகள், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், பூங்காக்கள் , புனித ஸ்தலங்கள்
என்பவற்றை தன்னகத்தே கொண்ட இலங்கையின் மிகப் பெரிய இராசதானி ஆகும். இலங்கையின்
மத்திய பிரதேசம் அல்லது மலை நாட்டின் தலை நகரம். கண்டியின் புராதனம் நோக்கின்
இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் ஆங்கிலேயர் கைவசம் சென்ற போதிலும் இரு
நூற்றாண்டுகளாய் சுய ராஜ்ஜியமாய் இருந்து 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரிடம்
ஒப்பந்தம் மூலம் கையளிக்கப் பட்டது. எந்த ஒரு அந்நியப் படையினாலும் இலகுவில்
கைப்பற்ற முடியாத பலம் மிக்க இராசதானியாக கண்டி காணப்பட்டமைக்கு முக்கிய காரணம்
அங்கே காணப்பட்ட மலை அரண்களும் மக்களின் இராச பற்றுமேயாகும். அங்கிலேயர்
கைவசமான கண்டி பல காலம் ஆங்கிலேயர் வசம் இருக்காது மீண்டும் புரட்சிகள் மூலம்
ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே சுதந்திரம் அடைந்தது. இலங்கையின் பணக்கார
நகரங்களுல் கண்டி முதன்மையானது, மேலும் சாதி அடிப்படையிலும் இன்று வரை கண்டி
சிங்களவரே உய்ர்வு என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
*ஜில்லென்று ஒரு பயணம்*
ஜில்லென்று ஒரு பயணம் என்ற தலைப்பு கூறுவது கண்டியை நோக்கிய பயணத்தையே.
கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்று சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும்
கொழும்பிற்கு வர அதிக படச நேர செலவு ஒரு நாள் மட்டுமே.
பண செலவு பயணிக்கும் முறைகளைக் கொண்டு மாறு படும் ரயில், பேருந்து,
சிற்றூர்திகள் மூலம் பயணிக்கலாம்.  இதில் மிகவும் ரசனைக்குரியது என்னவெனில்
கண்டிக்கு பயணம் செய்வதன் மூலம்  மலைகள், மலர்கள் , நீரோடைகள், நீர்
வீழ்ச்சிகள் என இயற்கை எழில்களை பார்க்கலாம். கொழும்பில் இருந்து பயணம்
தொடங்கிய சிறிது நேரத்திலேயெ முகத்தில் ஸ்பரிசிக்கும் குளிர்ந்த காற்று கண்டிப்
பயணத்தின் சிலிர்ப்பை வழங்கத் தொடங்கிவிடும்,. கண்டி நகரை சென்று அடைவதற்குள்
காணும் அழகிய பல காட்சிகள் இலங்கை ஆசியாவின் சொர்க்கபுரி என்பதன் அர்த்ததை
தெளிவு படுத்திச் செல்லும்.

கண்டி நகரம் / மகா நுவர *
கண்டி நகரம் பரபரப்பு மிகுந்து அதிக சுற்றுலாப் பயணிகளையும் தேயிலை
வியாபாரிகளையும் நிறைத்துக் காணப்படும். இங்கிருந்து சிறிது தூரம் பயணம்
செய்யின் பேராதெனிய பூங்காவினை காணலாம் அங்கே பலவகைப் பட்ட தாவரங்கள் மலர்
வகைகள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். மிகவும் நேர்த்தியாகவும்
இயற்கை எழில் குறையாமலும் பராமரிக்கப் பட்டிருக்கும் பேராதெனிய பூங்காவின்
எழில் இயற்கை அன்னை மலர்களையே ஆடையாய் தரித்ததாய் தோன்ற வைக்கும்.
*தலதா மாளிகை*
இலங்கையின் மிகப் புராதன பௌத்த ஆலயம். தங்க கோவிலும் சுற்றிக் காணப்படும்
ஏரியும் அழகு எனில், உள்ளே காணப்படும் புத்தர் சிலையும், தந்த தாதுவும் தெய்வீக
நிறைவைக் கொடுக்கும் இதனை ஒரு பொழுது போக்கும் சுற்றுலாத்தலாமாக கொள்ளின் அதன்
கட்டிடக் கலையமைப்பும், சிற்பங்களும் பல பௌத்த கலைகளை விளக்குவதாய்
அமைந்திருக்கும். ஆயினும் வாசஸ்தலம் என்ற முறையில் இங்கு பல கட்டுப் பாடுகள்
காணப்படுகின்ற. அமைதி காத்தலும், ஆடை முறை காத்தலும் மிக முக்கியமான ஒழுக்கமாக
இங்கே கருதப் படுகிறது.
*பின்னவளை*
கண்டி நகரம், பூங்கா, தலதா மாளிகை என்பவற்றை பார்த்து விட்டு மீண்டும் கொழும்பு
நோக்கிப் பயணமாகும் பொழுது வழியில் சந்திக்கும் மிக அழகிய இடம் பின்னவளை எனும்
யானைகள் சரனாலயம், இங்கே பல யானைகள் மிக சுதந்திரமாக உலாவரும், அங்கு
காணாப்படும் ஆற்றில் குளிக்கும் யானைகள், நடனமாடும், யானைகள், விளையாடும்
குட்டி யானைகள் என பல காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved