
ஊட்டியில் பல வண்ண ரோஜா : சுற்றுலா பயணிகள்
வியப்பு
ஊட்டி ரோஜா
பூங்காவில் தற்போது மலர்ந்துள்ள பச்சை,
கறுப்பு, நீலம் போன்ற அரிய ரோஜாக்களைக் கண்டு
சுற்றுலாப் பயணிகள் வியப்படைகின்றனர். ஊட்டி
விஜயநகர பண்ணையில் அமைந்துள்ள ரோஜா
பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்
கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
தோட்டக் கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
இந்தப் பூங்காவில் 3,800 ரக ரோஜாக்கள் உள்ளன;
200 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்தப் பூங்காவில் 30 ஆயிரம் ரோஜா
செடிகள் உள்ளன. 50 சதவீத செடிகளில் ரோஜா
மலர்கள் பூக்கத் துவங்கி விட்டன. ரோஜா
கண்காட்சிக்குள், பூங்கா முழுவதிலும் உள்ள
அனைத்துச் செடிகளிலும் பல வண்ண ரோஜாக்கள்
பூத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பச்சை, கறுப்பு, நீல நிற ரோஜாக்கள் சுற்றுலாப்
பயணிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன.
"மினியேச்சர்' எனப்படும் சிறிய ரக
ரோஜாக்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில்
அதிக வரவேற்பு உள்ளது. முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா பெயரைக் கொண்டுள்ள ரோஜாவும் தற்போது
பூத்துள்ளது. எட்டாவது ரோஜா கண்காட்சி வரும்
20ம் தேதி நடக்கிறது. கண்காட்சியையொட்டி,
தனியார் பூங்காக்கள் பங்கேற்கும் போட்டிகளும்
நடத்தப்படவுள்ளன. இதில் சிறந்த பூங்கா, மலர்
அலங்காரம், சிறந்த மலர்கள் ஆகிய பிரிவுகளில்
போட்டிகள் நடத்தப்படும்.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து
வருகின்றன. வரும் நாட்களில் ரோஜா பூங்காவிற்கு
அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது
Home |