|

உலக
தடகள 200
மீ ஓட்டம்-போல்ட் புதிய சாதனை
பெர்லின்: சாதனைகளை
உடைப்பது தனக்கு சாதாரணம். அது சொந்த
சாதனையாக இருந்தாலும் சரி என்பதை
மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்
ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன்
போல்ட்.
உலக சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடந்த
200
மீ ஓட்டத்தில் அவர் 19.19
வினாடிகளில் வந்து புதிய சாதனை படைத்தார்.
முன்னதாக
கடந்த பீஜிங் ஒலிம்பிக் தொடரில் அவர்
19.30
வினாடிகளில் போட்டி தூரத்தை
கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவர் தனது
சொந்த உலக சாதனையை
முறியடித்துள்ளார்.
இப்போட்டியில் பனாமா வீரர் அலான்சொ எட்வர்டு
19.81
வினாடிகளில் வந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
வெண்கலத்தை
அமெரிக்காவின் வாலஸ் ஸ்பியர்மென்
கைப்பற்றினார்.
போல்ட் கடந்த 15ம்
தேதி இதே உலக கோப்பை சாம்பியன்ஷிப் தொடரி்ல்
நடந்த 100
மீ.,
ஓட்டத்திலும்
புதிய உலக சாதனை படைத்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
|