Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

 

11 வயதில் தாயாகி, 23 வயதில் பாட்டியாகி உலக சாதனை!

 

ருமேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்மனி 11 வயதில் தாயாகி, 23 வயதில் பாட்டியாகி, உலகிலேயே "இளம் பாட்டி" என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
ருமேனியாவைச் சேர்ந்தவர் ரிப்கா ஸ்டேன்ங்கு (23).   இவர்   கணவர் அயோனஸ் ஸ்டேன்ஸ் (25). தங்க நகை வியாபாரி. ரிப்கா தனது 11 வயதில் ஸ்டேன்ஸ்சைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது கணவர்  ஸ்டேன்ஸ்சுக்கு 13 வயது.

இந்த நிலையில் தனது 12-வது வயதில் ரிப்கா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு மரியா என பெயரிட்டார். அதன் பின்னர் நிக்கோல் என்ற மகன் பிறந்தான். குறைந்த வயதில் சிறுமியாக இருந்த போதே குழந்தை பெற்ற ரிப்கா இருந்த நிலை தனது மகள் மரியாவுக்கு வரக்கூடாது என விரும்பினார்.

எனவே, அவரை ஒரு பள்ளியில் தங்க வைத்து படிக்க வைத்தார். ஆனால் விதி யாரை விட்டது. படிக்கும் பொழுதே மரியா ஒரு மாணவனைக் காதலித்தாள். அவனுடன் நெருங்கி பழகினாள். விளைவு கர்ப்பம் அடைந்தாள். சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

இதன் மூலம் தனது 23-வது வயதில் ரிப்கா பாட்டி ஆகவும், அவரது கணவர் ஸ்டேன்ங்கு தாத்தாவாகவும் ஆகி விட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ரிப்கா கூறும்போது, "எனது நிலை என் மகளுக்கும் வரக்கூடாது என நினைத்தேன். 40 வயதில் தான் பாட்டியாகவேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னை 23 வயதிலேயே என் மகள் பாட்டியாக்கி விட்டாள்" என்று தனது பேரனைக் கொஞ்சியபடியே கூறினார்.

இதற்கு முன்பு ரோதர்ம் நகரைச்சேர்ந்த 26 வயது பெண்தான் இங்கிலாந்தின் மிக இளமையான பாட்டி என்ற பெருமையைப் பெற்று இருந்தார்.

இப்போது 23-வது வயதில் ரிப்கா இங்கிலாந்தின் மிக இளமையான பாட்டி ஆகவும், அவரது கணவர் ஸ்டேன்ங்கு 25-வது வயதில் இங்கிலாந்தின் மிக இளமையான தாத்தாவாகவும் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டனர். 29 வயதில் பாட்டியான மற்றொரு பெண்ணின் செய்தியினையும் இந்நேரம் முன்னர் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved