Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

கை, கால் இழந்தவரான பிலிப் குரோய்சன் ஆங்கிலக்                      கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கை, கால் இழந்தவரான பிலிப் குரோய்சன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

பிலிப் குரோய்சனுக்கு தற்போது வயது 42. கடந்த 1994-ம் ஆண்டு ஏணியில் ஏறி டிவி ஆன்டனாவை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பிலிப் தனது 2 கைகளையும், கால்களையும் இழந்தார்.

கை, கால்களை இழந்தாலும் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்வில் தன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று நம்பினார். இதையடுத்து தனக்குப் பிடித்த நீச்சலில் உலக சாதனை படைக்க எண்ணி அதற்கான பயிற்சி மேற்கொண்டார்.

இங்கிலாந்தின் போக்ஸ்டோனில் இருந்து புறப்பட்டு பிரான்ஸில் உள்ள விசான்ட் நகரை ஆங்கிலக் கால்வாய் வழியாக நீந்தி வந்தடைந்தார். இவர் 34 கி.மீ தூரத்தை நீந்திக் கடந்துள்ளார்.

இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர் 13 மணி நேரத்திலேயே கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

தன்னம்பிக்கையை துடுப்பாகப் பயன்படுத்தி ஆங்கிலக் கால்வாயை இவர் நீந்திக் கடந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved