|

100
வயதை கடந்து இரட்டை சகோதரிகள் சாதனை!
பெல்ஜியம்
நாட்டைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
100
வயதைக் கடந்து சாதனை
படைத்துள்ளனர். இதன் மூலம் உலகின் மூத்த
இரட்டையர் என்ற பெருமை
கிடைத்துள்ளது.
லீஜே நகரைச் சேர்ந்தவர்கள் கேப்ரில்லி
வாண்ட்ரெமர் மற்றும் மேரி ஹெண்ட்ரிக்ஸ்
சகோதரிகள். இரட்டையரான் இவர்களுக்கு பிள்ளைகள்
இல்லை.
இப்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகின்ற
இந்த இரட்டை சகோதரிகள்
100
வயதைக் கடந்து உலகின் மூத்த இரட்டையர் என்ற
புதிய சரித்திரம் படைத்தனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற இவர்களது பிறந்த நாள்
விழாவில்
28
உறவினர்கள்
உள்ளிட்ட 200
பேர் கலந்து கொண்டனர்.
அவர்களது குடும்ப பாரம்பரிய பாடல்களை பாடி
உற்சாகமாக பிறந்த நாளை
கொண்டாடினர். நகராட்சி நிர்வாகமும் இவர்களைக்
கௌரவித்தது. எனினும்,
பிரான்ஸ் நாட்டின்
98
வயதான சகோதரிகள் உலகின் மூத்த இரட்டையர் என
கின்னஸ்
உலக சாதனை புத்தகம் கூறுகிறது.
வேண்டுகோளின் அடிப்படையில் மட்டுமே கின்னஸ்
புத்தகத்தில் தகவல்கள் இடம்
பெறுகின்றன. ஆனால்,
பெல்ஜியம் சகோதரிகள் கின்னஸ் புத்தகத்துக்கு
விண்ணப்பிக்காததால் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகின்றது
|