|
காகிதபென்சில் முனையில் சிற்பம் :
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சாதனை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு
இன்ஜினியரிங் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர்,
காகித பென்சில்
முனையில் சிற்பங்கள் செதுக்கி சாதனை
படைத்துள்ளார்.
சாதனை செய்வதற்கு வயது,
படிப்பு போன்ற எதுவும் தடையில்லை. வல்லவனுக்கு
புல்லும் ஆயுதம் என்பது போல்,
கிடைக்கும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை
பயன்படுத்தி இன்றளவும் பலர்,
பல வியக்கத்தகு சாதனைகள் படைத்து
வருகின்றனர்.அந்த வகையில்,
திருச்செங்கோட்டில் உள்ள
தனியார் இன்ஜினியரிங்
கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் ஜெகதீஷ்,
காகித பென்சிலில் பல நுணுக்கான
சிற்பங்களை செதுக்கி அனைவரது கவனத்தையும்
ஈர்த்துள்ளார்.அதன்படி,
காகித
பென்சில் முனையில்,
2011ம்
ஆண்டின் உலக கிரிக்கெட் கோப்பை,
பாரீஸில் உள்ள
உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம்,
திருவள்ளுவர் சிலை,
சங்கிலி தொடர் மற்றும்
செஸ் போர்டு,
விளையாட்டு பொம்மை என பலவிதமான நுண்ணிய
சிற்பங்களை உருவாக்கி
சாதனை படைத்துள்ளார்.இதுபோல்,
பலவிதமான கலை படைப்புகள் உருவாக்கி சாதனை
படைத்துள்ள மாணவன் ஜெகதீஷை,கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள்
பாராட்டினர்
Home |