|

உலகின் மிக நீளமான கூந்தலை உடைய ஆணாக
இலங்கையர் சாதனை!
உலகின்
மிக நீளமான கூந்தலை உடைய ஆண் என்று
கின்னஸ் புத்தகத்தில்
இடம்பிடித்துள்ளார் கனடாவில் வாழும் இலங்கையரான
சுதேஸ் முத்து (வயது
40).
இவரது கூந்தலின் நீளம் ஆறு அடி மூன்று
அங்குலம்.
இவரின் உயரமோ ஐந்து அடி ஒன்பது
அங்குலம்.
சர்வதேசப் பிரசித்தி வாய்ந்த பாடகர்
Bob Marley
இன் இசைப்
பிரியனான சுதேஸ்
Marley
இன் கூந்தலால் கவரப்பட்டவர்.
17
ஆவது வயதில் இருந்து இக்கூந்தலை
வளர்த்து வருகின்றார்.
இவர் 1995
ஆம்
ஆண்டு கனடாவில் குடியேறினார். 1999
ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு திரும்பிச்
சென்று திருமணம் செய்து கொண்டார்.
அப்போது கூட கூந்தலை வெட்டுகின்றமைக்கு
மறுத்து விட்டார்.
இவரின் தாய்
உட்பட சொந்தக்காரர்கள் பலர் கூந்தலை சுதேஸ்
வெட்டினால்தான் திருமணத்துக்கு
வருவார்கள் என்று பிடிவாதம் பிடித்தனர்.
ஆயினும்
சுதேஸ் மசிந்து கொடுக்கவே இல்லை.
மீண்டும் கனடாவுக்கு வந்த இவர் கடினமான
உழைப்பினால் முன்னேறி பிளாஸ்ரிக்
பொருட்களை மீள்சுழற்சி முறையில்
பயன்படுத்தும் கம்பனி ஒன்றின் உரிமையாளராக
உள்ளார்.
மனைவி
மற்றும் மூன்று ஆண் குழந்தைகளுடன்
Thornhill
நகரில் வசிக்கின்றார்.
சுதேஸின்
தாயார் கின்னஸ் சாதனையை
அறிந்தவுடன் தொலைபேசியில் சொன்ன வசனம்
இப்போதாவது கூந்தலை வெட்டி விடு
என்பதுதான்.
மனைவியுடன்
படுக்கையில் தூங்கும்போது
இக்கூந்தல் பாரிய பிரச்சினையாகத்தான்
இருக்கின்றது என்று ஒப்புக்
கொள்கின்றார் சுதேஸ்.
உலகின் மிக நீளமான
கூந்தலை உடையவர் அமெரிக்காவின்
Florida
மாநிலத்தைச் சேர்ந்த
Asha mandela
என்கிற பெண் ஆவார்(வயது
48).
இவரது கூந்தலின் நீளம் எட்டு அடி ஒன்பது
அங்குலம்.
|