|
துண்டிக்கப்பட்ட விரலை இணைத்து சாதனை!!
துண்டிக்கப்பட்ட
கட்டை விரலை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம்
இணைத்து பிம்ஸ் மருத்துவ
குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் குமார் (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) (வயது
28 ).
பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இவருடைய
வலது கை கட்டைவிரல் துண்டானது. இவரை மீட்டு
பிம்ஸ் மருத்துவமனையில் உள்ள
ஓட்டுறுப்பு அறுவை சிகிச்சைப் பிரிவில்
அனுமதித்தனர்.
டாக்டர்கள்
சரத் ராம்தாஸ்,
லிங்கம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர்
துண்டிக்கப்பட்ட
பகுதியைச் சோதித்தனர். அப்போது,
அவரது துண்டிக்கப்பட்ட விரல் அதிக
சேதமில்லாமல் இருந்ததைக் கண்டு உடனடியாக
நுண்கருவி மூலம் அறுவை சிகிச்சை
மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை நான்கு மணி
நேரம் நடைபெற்று கட்டைவிரல்
வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
இது
குறித்து டாக்டர் சரத் ராம்தாஸ் கூறுகையில்
“பொதுமக்கள்
துண்டிக்கப்பட்ட
பாகத்தை எடுத்து வரும்போது,
அதனைக் கவனமாக சுத்தமான கட்டுத்துணியைச்
சுற்றி,
அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் ஐஸ் பெட்டியில்
வைத்து,
6
மணி
நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு வர
வேண்டும். இதனால் அப்பாகத்தின்
திசுக்கள் கெடாமல் இருக்கும். அவ்வாறு
குமாரின் துண்டிக்கப்பட்ட விரலை
கொண்டு வந்ததால்,
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்ய
முடிந்தது. இது
குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட
வேண்டும் என்றார்
Home |