Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  |  சாதனைகள்

 சாதனைகள்

 

  கிட்டார் வாசிக்கும் 10 வயது ஜப்பான் சிறுவன்   சாதனை

 

இசையில் நல்ல ஞானம் கொண்டவர்கள் வாசிக்கும் கிடார் இசைக்கருவியை, ஜப்பானிய சிறுவன்  10 வயதிலேயே பலரும் வியக்கும் வண்ணம் வாசிப்பதால், உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றுள்ளார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யூட்டோ மியாசவா (10 வயது) என்ற சிறுவன் ஹொங்கொங்கில் உள்ள பிரபல சமூக மையங்களில் கிடார் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

சிறுவனின் இசை நிகழ்ச்சியைப் காண பெரும் கூட்டமே கூடுகிறது. இடம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர், நின்றபடியே, இசை நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

சிறுவனுகென்று உருவாகியுள்ள ரசிகர் கூட்டம், சில குறிப்பிட்ட பாடல்களை மீண்டும் கேட்கிறது. ஹொங்கொங் மட்டுமல்லாது, சிகாகோவில் கூட அவன் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளான்.

தவிர, பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் சிறுவனின் இசை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. கிடார் இசைக்கருவியை வாசிப்பதில், மேதையாக திகழும் யூட்டோ, மிகக்குறைந்த வயதில், தொழில்முறையில் கிடார் வாசிப்பாளர் என்ற பிரிவில், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவனது தந்தை சுனியோ மியாசவா கருத்து வெளியிடுகையில் என் மகன் மிகச்சிறிய வயதில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில், எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. யூட்டோ பிறந்து, ஒன்றரை வயதில் கிடாரை கைகளால் தொட்டான். பின், அவனது தாத்தா கிடார் பொம்மையை அவனுக்கு பிறந்த நாளின் போது பரிசளித்தார். அவனுடைய நான்காவது பிறந்த நாளில் இருந்து கிடார் பயிற்சி வகுப்புக்கு போக ஆரம்பித்தான். இப்போது, உலகளவில் பிரபலமாகி, கின்னசிலும் இடம் பிடித்து எங்களுக்கு பெருமை சேர்த்து விட்டான் என தெரிவித்துள்ளார்.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved