Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 
 முன் பக்கம்  |  சுற்றுலாதளங்கள்  சாதனைகள்

 சாதனைகள்

 

யாழ். தடகளப் போட்டிகளில் புதிய சாதனைகள்!

 

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் பிரதேச செயலகங்களுக்கிடையே யாழ். மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நேற்று நடத்திய ஆண்-பெண் இருபாலருக்கான தடகளப் போட்டிகளில் முந்திய சாதனைகள் முறியடிக்கப்பட்டு நான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
 
 
ஆண்கள் பிரிவில் மூன்று சானைகளும் பெண்கள் பிரிவில் ஒரு சாதனையும் முறியடிக்கப்பட்டன. இருசாதனைகள் சமப்படுத்தப்பட்டும் உள்ளன.
 
 
ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த என்.நிசாந்த, 13.60 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனையை ஏற்படுத்திமை மூலம் 1977ஆம் ஆண்டு கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆர்.இராஜசேகரம், 13.56 மீற்றர் பாய்ந்து ஏற்படுத்தியிருந்த சாதனை 33 வருடங்களின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ்.வாகீசன், 51.95 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாதனையை ஏற்படுத்தியமை மூலம் 2003 ஆம் ஆண்டு உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. பகீரதன் 49.62 மீற்றர் எறிந்து ஏற்படுத்தியிருந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எ.ரஜீம்ராஜ், 7.00 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய சாதனையை ஏற்படுத்தியமை மூலம் 2002 ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. ரஞ்சித்குமார், 6.71 மீற்றர் பாயந்து ஏற்படுத்தியிருந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ரி.மோகுநாத், 3.40 மீற்றர் தூரம் பாய்ந்து 2002 ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஏற்படுத்தியிருந்த சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
 
பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வி.கஜிதா, 1.61 மீற்றர் தூரம் பாய்ந்து சாதனையை ஏற்படுத்தியமை மூலம் 2002ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சேந்தினி, 1.55 மீற்றர் பாய்ந்து ஏற்படுத்தியிருந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
 
பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ்.கீர்த்திகா, 10.24 மீற்றர் தூரம் பாய்ந்து 2005 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எ.பௌத்திரா ஏற்படுத்தியிருந்த சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

 

 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved