|

ஒரு செல்போனின் விலை ரூ.6
கோடி! கின்னஸ் சாதனை
ஜெனிவா:
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த செல்போன் தயாரிப்பு
நிறுவனமான
‘கோல்டுவிஷ்’.
ஆடம்பர பிரியர்களுக்காகவே செல்போன்களை
வடிவமைத்து வருகிறது.
தங்கத்தில்
வைரக் கற்களை பதித்து இல்யூஷன்
என்ற
பெயரில் முதலில் செல்போன்
வெளியிட்டது. ரஷ்யா,
துபாய்,
ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த போனுக்கு
பெரும் வரவேற்பு இருந்ததால் 2006&ல்
‘லி
மில்லியன்’
என்ற ஆடம்பர தங்க
போனை கோல்டுவிஷ் நிறுவனம் வெளியிட்டது.
செல்போனில் மொத்த பேனலும்
18
காரட் தங்கம்,
பார்டருக்கு பிளாட்டினம்,
கொஞ்சம்கூட இடைவெளி இல்லாமல்
120
காரட் வைரக் கற்கள். உலகம் முழுவதும்
பயன்படுத்தக்கூடிய வகையில்
‘குவாட்&பேண்ட்’
வசதி இருப்பது கூடுதல் சிறப்பம்சம். விலை ரூ.5.99
கோடி. ஆர்டர் கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த போனை பிரத்யேகமாக டிசைன்
செய்து கொடுக்கிறது கோல்டுவிஷ் நிறுவனம்.
உலகின்
எக்ஸ்க்ளூசிவ் ஆடம்பரமான
செல்போன்
மற்றும் உலகின் காஸ்ட்லி செல்போன் என
இரு கின்னஸ் சாதனைகளை இந்த போன் படைத்திருக்கிறது. மேலும் உலகின் காஸ்ட்லி
போன் என்ற பெயரை கோல்டுவிஷ் லி மில்லியன்
தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
|