|

கின்னஸ் சாதனை
படைத்த பூனை
உலகில் மிகவும் பலமாக உறுமும் பூனை என்ற
கின்னஸ் உலக
சாதனையை பிரிட்டனைச் சேர்ந்த ஸ்மோக்கி என்ற
பூனை நிலை நாட்டியுள்ளது.
12
வயதான இந்தப் பெண் பூனை
67.7
டிபி வரையிலான ஒலியை எழுப்புவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் நோர்த்ஹம்டன்,
பிட்ஸ்பொர்ட்,
ஸ்பிரிங் ஹில் பாமில் வசித்து வரும் ருத்
எடம்ஸ் என்பவரே,
ஸ்மோக்கியை
வளர்க்கின்றார். உலகில் மிகவும் பலமாக உறுமும்
வீட்டுப் பூனை என்ற கின்னஸ்
உலக சாதனை வழங்கப்பட்டமை இருவருக்கும் பெரு
மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக
ருத் எடம்ஸ் தெரிவித்தார்.
பூனைகளை பாதுகாக்கும் அறக்கட்டளை
ஒன்றுக்காக நோர்த்ஹம்டனில் நடைபெற்ற உறுமும்
போட்டியில் ஸ்மோக்கி முதல்
தடவையாக கலந்து கொண்டது என அவர்
குறிப்பிட்டார். ஸ்மோக்கியின் சாதனை
முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்
நன்றி பாராட்டுவதாக அவர்
தெரிவித்தார்.
அபூர்வமான விடயங்களுக்காக கின்னஸ் உலக சாதனை
வழங்கப்படுவதாக,
கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் பிரதம ஆசிரியர்
க்ரேய்க்
கின்டேய் தெரிவித்தார். வெக்யூம் கிளினர்
ஒன்றின் ஒலிக்கு நிகராக
பூனையொன்று உறுமி ஓசை எழுப்புவது ஆச்சரியமானது
என அவர் குறிப்பிட்டார்.
மேலதிகத்
தகவல்:- உலகில் மிகவும் பலமாக ஒலி எழுப்பக்
கூடிய விலங்கினமாக நீலத்
திமிங்கலங்கள் கருதப்படுகின்றன.
திமிங்கிலங்கள் தங்களுக்குள் தகவல்களை
பரிமாறிக் கொள்ளும் போது
188
டி.பி. அலகு வரையிலான ஒலியை எழுப்புவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. முழுமையான அமைதி நிலைமை
0
டிபியாகவும்,
காரின் ஹோர்ன்
ஒலி
110
டி.பியாகவும்,
இசை நிகழ்ச்சியொன்றின் ஒலி
120
டிபியாகவும்
கணிக்கப்படுகின்றது. நீலத் திமிங்கலங்கள் இவை
அனைத்தையும் விட ஒலி எழுப்பக்
கூடியவை.
|