உடல் நலம்,
சுகாதாரம்,
தண்ணீர்,
மருத்துவம்
இதைச் சொன்னால் இதெல்லாம் ஒரு
ஆராய்ச்சியா என நீங்கள் சிரிக்கக் கூடும்
ஆனால் இந்த ஆராய்ச்சியை மிகப் பெரிய ஒன்றாகக்
கொண்டாடுகின்றனர் யூகே வின்
கார்டிஃப் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள்.
ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த
உபாதைள் வந்தால் சூடான பானத்தை அருந்துவது
நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும்
என்பதே அந்த ஆராய்ச்சி
முடிவு.
இது ஒரு மிகப்பெரிய
கண்டுபிடிப்பு. பெரும்பாலான மக்களை
எரிச்சலுக்கும்,
சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய்
ஒன்றுக்கு இத்தகைய எளிய மருத்துவ
வழி இருப்பதும்,
அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ
உலகின் மகத்துவம்
என வியந்து பேசுகிறார்
ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரான்
எக்லர்ஸ்.
குளிர் காலங்களில் சூடான
பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின்
தாக்கங்களும்,
அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும்.
சூடான பானங்களை
இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள்
வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்
என்கிறார் அவர்.
மூக்கு ஒழுகுதல்,
எரிச்சல்,
தும்மல்,
தலைக்கனம்,
சோர்வு,
தொண்டை வலி என
எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி
குடியுங்கள் என அவர்
அறிவுறுத்துகிறார்.
ஜலதோஷம்,
தொண்டை வலி என ஏதேனும் வந்தால் சுடச் சுட
கருப்பட்டியுடன் ஒரு
சுக்கு காப்பி போட்டுத் தரும் நமது
பாட்டிகளின் மகத்துவத்தை முழுமையாய்
அறிந்து கொள்ள மேலை நாட்டினருக்கு இன்னும்
எத்தனை காலம் பிடிக்குமோ
தெரியவில்லை.
|