Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

 சுகாதாரம்

 

 

கொசுக்கள்

ஒரு காலத்தில் பத்து லிட்டர் பால் காலை மாலை இருவேளையும் கொடுத்து வந்த பசுக்களும் எருமைகளும் வயதாகி உடலில் இருந்த தெம்பெல்லாம் போன பின்னே இனி வீடுதிரும்பினால் ஆபத்து, மனிதருக்கு உணவாகிவிடுவோம் என்று பயந்து புல் மேய கொண்டு சென்ற போது தப்பித்து ஓரிடத்தில் வந்து ஒளிந்து கொண்டதுவாம், இவற்றைப் போன்றே தப்பித்து வந்த குதிரை கழுதை,கோழி,வாத்து,எருது,பன்றி, நாய் இன்னும் பல மிருகங்களும் ஒன்றாய் சேர்ந்தன.

ஒவ்வொன்றும் தங்களது சோகக் கதைகளை எடுத்துச் சொல்லி மனிதர்கள் தங்களுக்கு செய்த கொடுமைகளுக்கு பழி தீர்த்துக்கொள்ள ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று பலத்த யோசனையில் மூழ்கியதாம். அப்போது அங்கே வந்த கொசுக்களும் ஈக்களும் இவற்றின் தோல் மீது உட்கார்ந்து உடலில் மீதமிருந்த இரத்தத்தை உறிஞ்ச துவங்கியதாம், அப்போது அங்கிருந்த மிகவும் பலகீனமான பசு ஒன்று கொசுக்களிடமும் ஈக்களிடமும் 'நாங்களே உடலிலிருந்த ரத்தத்தை எல்லாம் இழந்துவிட்டு வெறும் ஓடாகி போனோம், எங்களை ஏன் இன்னும் துன்பப்படுத்துகிரீர்கள்' என்று கேட்டதாம்.

அப்போது கொசுக்களும் ஈக்களும் உங்களது வேதனைக்கு யார் காரணம் எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் தீர்வு சொல்லுகிறோம் என்று சொன்னதாம், பாழாய்ப் போன மனிதர்கள் தான் எங்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்டார்கள் அவர்களை எப்படி பழி வாங்குவதென்று நாங்கள் யோசித்து வருகிறோம் என்றதாம்.

உடனே கொசுக்களும் ஈக்களும் நாங்கள் அவர்களை பழி தீர்த்து கொள்ளுகிறோம் நீங்கள் கவலை படவேண்டாம் என்று சொல்லிவிட்டு மனிதர்கள் நிறைந்த கிராமம் நகரம் என்று ஒரு இடம் தவறாமல் படையெடுத்து வந்ததாம், பகலெல்லாம் மனிதர்களின் கழிவு நீரிலும் மறைவிடங்களிலும் ஒளிந்திருந்து இரவாகும் சமயத்தில் மனிதர்களின் உடலை குத்தி இரத்தம் உறிஞ்சி நோய் பரப்பும் கிருமிகளை ரத்தத்தில் செலுத்திவிட்டு மனிதர்களுக்கு நோய் பரப்பி வந்தன.

இதை அறிந்த மிருகங்கள் மிகவும் சந்தோசம் அடைந்தாலும் அதன் கூட்டத்தில் ஒவ்வொன்றாய் இறந்து போனதாம், மனிதர்களும் கொசுவையும் ஈக்களையும் அழிக்க படாதப் பாடுபட்டார்களாம், ஒரு நாளைக்கு கோடிகணக்கில் கொசுக்கள் தங்கள் இனவிருத்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாம், இந்நிலையில் புதிய இன கொசுக்கள் வந்து சேர்ந்தன, நீங்கள் எல்லாம் யாரென்று பழைய கொசுக்கள் கேட்க்க புதியது சொன்னதாம், நாங்கள் ஆப்ரிக்கா காடுகளில் வாழ்ந்து வந்தோம் அங்கே வந்த சில மனிதர்களை நாங்கள் கடித்து வைத்தோம் அவர்களில் பலர் எங்கள் கடியினாலே நோய்வாய் பட்டு இறந்து விடவே சில மனிதர்கள் அங்கு வந்து எங்களை பிடித்துச் சென்று சோதனை செய்து நாங்கள் கடித்ததினால் தான் இறந்தவர்களுக்கு புதிய காய்ச்சல் வந்தது என்று கண்டுபிடித்தார்,

இதை அறிந்த சில மனிதர்கள் எங்களை பிடித்துச் சென்று எங்கள் இனத்தை பெருகச்செய்தார் நாங்களும் சந்தோசம் மிக அடைந்தோம், புதிய புதிய ஊர்களுக்கு நாங்கள் அனுப்பப்பட்டு சுதந்திரமாய் திரிந்து வாழ வெளியே விடப்பட்டோம் கிடைத்த மனிதர் குழந்தை எல்லாரையும் கடித்து வைத்தோம் நாங்கள் கடித்த மனிதர்களுக்கு புதிய காய்ச்சல் வந்து அவதிபடுவதை நாங்கள் பார்த்த போது மனிதர்களே சிலர் எங்களை உபயோகப்படுத்தி எங்கள் மூலம் மனிதர்களுக்கு தீராத காய்ச்சல் ஏற்ப்பட காரணமாய் இருக்க கண்டோம் என்றதுவாம்.

 


Home

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved