|

காபி குடித்தால் புற்றுநோய்,
சர்க்கரை நோய் பயமில்லை
புற்றுநோயைத் தவிர்க்க பழங்களையும்,
காய்கறிகளையும் தான் முக்கிய உணவுப்
பொருளாக சாப்பிட வேண்டும் என மருத்துவ
நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த
வித மாற்றமும் இல்லை. ஆனால் தற்போது அதற்கு
சமமாக காபியை சிபாரிசு
செய்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமான விஷயமாக உள்ளது. நாள்
ஒன்றுக்கு ஒரு
வேளையாவது காபி குடிக்க வேண்டும் என்பது
மருத்துவர்களின் அறிவுரை.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டி
ஆக்சிடென்ட் காய்கறிகள் மற்றும்
பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள்,
தக்காளி போன்றவற்றில் இந்த ஆன்ட்டி
ஆக்சிடென்ட்ஸ் உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ
நிபுணர்கள்
கூறிவந்தனர். ஆனால் இப்போது காபியிலும்
ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உள்ளது என்று
கண்டுபிடித்துள்ளனர்.
“புற்றுநோய்க்கு
மட்டுமல்ல,
இரண்டாம் வகை சர்க்கரை நோய்,
பர்கின்சன் நோய்
போன்றவை வராமல் தடுக்கவும் காபி பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு நாலைந்து முறை
முறை காபி குடிப்பது நல்லது தான். ஆனால் காபி பிடிக்காதவர்கள்
பலர்
உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு
ஒரு முறையாவது காபி
குடிப்பது நல்லது.
காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி
சிலர் தவறான அபிப்ராயம்
வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு,
ஜந்து முறை காபி குடித்தால் கூட நல்லது
தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம்,
காய்கறிகளை உணவில் சரிவர
சேர்க்க விரும்பாதவர்கள்,
குறைந்த பட்சம் காபி குடித்தாவது நோய்களை
தவிர்க்கலாம் என மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர் .
எனவே காபி குடிக்காதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு காபியாவது
குடித்துத்தான் பாருங்களேன்
|