|
தலைச்சுற்றல்,
வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
*
நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று
சாப்பிட்டால்,
மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை
உண்டாக்கும்.
*
நெல்லிக்காய்,
நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து
சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு
பெறும்.
*
நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும்
வாந்தி நீங்கும்.
*
நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி
சாப்பிட்டு வந்தால்,
பெருவயிறு,
இரத்தசோகை,
மூலம்,
பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு
ஆகியவை நீங்கும்.
*
நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து
மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய
கழிச்சல் தீரும்.
*
நெல்லிவற்றலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து
தலையில் தேய்த்து குளித்தால் கண்கள்
குளிர்ச்சி பெறும்.
*
நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து
வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து
பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி,
அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு
பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு,
வாந்தி ஆகியவை நீங்கும்.
*
நெல்லிவற்றலுடன் வில்வஇலை,
சீரகம்,
சுக்கு,
பொரி ஆகியவற்றை ஒன்றாக
இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து
வடிகட்டி பருகினால் பித்த வாந்தி
நிற்கும்.
*
நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி
மற்றும் சுவையின்மை நீங்கி,
சுவை உண்டாகச் செய்யும்.
*
நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம்,
பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக்
கொண்டு பொடியாக்கி,
தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி
காலை,
மாலை
தண்ணீரில் உட்கொள்ள,
பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள்
யாவும்
நீங்கும்.
*
நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது)
தலையில் ஊறியதும்
குளித்தால் முடி செழித்து வளரும். முடி
உதிராமல் நன்கு வளரும். இளநரை
சிறிது சிறிதாக மறையும்
|