|
முள் முருங்கை
"கருப்பாய்
சயத்திற் கறுத்த தடித்தே
பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த்
துரத்தி விடும்
பண்முருக்கு மின்பமொழி பாவாய்
உலகறிய
பிண் முருக்கம் பூவை மொழி"
கல்யாண முருங்கைக்கு
முள் முருங்கை,
கிஞ்சுகம்
போன்ற பெயர்கள் உண்டு.
இக்கல்யாண முருங்கையால்
சீதபேதி,
கீழ்வாதம்,
சூதக நோய்,
மூத்திர எரிச்சல்,
மூத்திரத் தடை,
கருப்பை நோய்
நீங்கும்.
"மருந்திடுதல்
போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்-வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு."
இடுமருந்தின் தோடத்தை நீக்கும்.
உடலில் உண்டாகும் பித்தத்தை தணிக்கும்.
உணவைச் செரிப்பிக்கும்.
கடுவனையும்,
வாயுவையும் உண்டாக்கும்.
இக்கீரை
இடுமருந்தை முரிப்பதுபோல் மற்ற மருந்துகளின்
செய்கையையும் கெடுக்கும்.
எனவே நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும்
காலங்களில் இந்தக் கீரையை நீக்க
வேண்டும்.
சாதாரணமாக நாள்தோறும் உணவாக உட்கொள்ளாமல்,
வேண்டும்பொழுது
மட்டும் இதைக் கறியாகச் சமத்துண்ண,
அகத்தியர் குணவாகடம் நூலில் கூறப்பட்ட
நற்குணங்களைக் கொடுக்கும்.
வயிற்றுப்புழு நீங்கும்.
"நல்லகத்தி
வேரதனை நாடுங்கால் மேகமெனும்
சொல்லகலுந் தாகமறும் தோகையே!-மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி னுள்ளெரிவும்
ஐயெரிவும் போமென் றறி."
அகத்தி
வேர்ப்பட்டையை,
விதிப்படி ஊறல் அல்லது குடிநீராக செய்து
உட்கொள்ள மேகம்,
நீர்வேட்கை,
உடலெரிவு,
கை எரிவு,
ஆண்குறியினுள் எரிவு,
ஐம்பொறிகளைச்
சேர்ந்த எரிவு ஆகியவைகளைப் போக்கும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை,
ஊமத்தன் வேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து
அரைத்து,
வாதவீக்கத்திற்கும்,
கீல்வாயுக்களுக்கும் பற்றிடலாம்.
வித்தகமாய் சூனிய
முடக்கொத்தானுமே
சமூலமெடுத்து
.........
வித்தராய மாயரைத்து மெத்தவே ஆவலாய்
உண்ணவே கட்டுகள் மலமும் சீதம்
விட்டுவிடுமே
.....
பயிலக் கட்டுவலி
தான் தானும் ஓடும்
திட்டமதாய் செயலாகும்.
முடக்கொற்றான் இலையை உண்ண முடக்குவாதம்,
பிடிப்புகள்,
மலக்கட்டு,
சீதக்கழிச்சல் ஆகியன நீங்கும்.
|