கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம்,
புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு,
நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச்
சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின்,
ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும்
ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு,
இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய்
எடுக்கப்படுகிறது.
* கிராம்பில் பலவித
மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும்
ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக
உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப்
பொருமல், குதவழிக் காற்றேhட்டம்
போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை
மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை
சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை
முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை
கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால்
ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம்
தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி
நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும்
ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை
விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
* நான்கு கிராம்
கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை
பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப்
பருகினால் காலரா குணமடையும்.
* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச்
சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு
நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால்
ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு
மிகச் சிறந்தது.
* கிராம்பு
எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும்
வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து
படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட
ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி
சரியாகும்.
* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப்
போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன்
கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
* கிராம்புப்
பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர,
வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை
குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட
ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு
காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால்
சுகம் கிடைக்கும்.
*
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்
ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து
அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.
தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால்
தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
* கண் இமைகளில்
ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில்
உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம்
கிடைக்கும்.
* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும்,
கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு
முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத்
தயாரிப்பிலும் இது பயன்படுகிறது
|