Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

 

வைட்டமின் டி மூலம் கிடைக்கும்

                                  ஆதாயங்கள்!

 


"சூரிய ஒளி வைட்டமின்" என்று செல்லமாக அழைக்கப்படும் வைட்டமின் டி, எலும்புகளின் வலிவை அதிகரிப்பதோடு நமது உடல், கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது என்பதை நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவர்.

ஆனால் 2007-ம் ஆண்டில் வெளியான ஆய்வு முடிவுகள் கூடவே வேறு பல ஆதாயங்களையும் வைட்டமின் டி நமக்குத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (multiple sclerosis) நோயையும் இந்த வைட்டமின் டி விரட்டுகிறது.

ஏன்..? கேன்ஸர் நோயைக்கூட உருவாகாமல் தடுக்கும் சக்தி வைட்டமின் டி’-க்கு உண்டு என தற்போதைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கேன்ஸரையும் வைட்டமின் டியையும் தொடர்புபடுத்திய முடிவுகள், மருத்துவ உலகில் இன்னமும் உறுதி செய்யப்படாவிட்டாலும்கூட பெருங்குடலில் ஏற்படும் கேன்ஸரை அது தீர்க்கவல்லது என்கிற லேட்டஸ்ட் தகவல் நமக்கொரு நல்ல செய்திதான்! ஆகவே வைட்டமின் டியை நாள்தோறும் நம் உணவில் சேர்க்க வேண்டியது நமது கடமையாகும்!

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved