மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள்
வாரம் இரு சாக்லெட்டுகள் சாப்பிட்டால்
இருதயக்கோளாறுகளால் மரணம் ஏற்படுவதை
தவிர்க்கலாம் என்பது ஒரு ஆய்வு மூலம்
தெரியவந்து உள்ளது. சுவீடன் நாட்டு
ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது
தெரியவந்து உள்ளது. சாக்லெட்டு சாப்பிடுவதை
அதிலும் குறிப்பாக கறுப்பு சாக்லெட்டு
சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டவர்களுக்கு
இருதயநோயால் மரணம் ஏற்படுவது 70 சதவீதம்
குறைவு என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது. சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில்
உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடிட்டில் உள்ள
ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை
நடத்தினார்கள்.
சாக்லெட்டை வாரம் ஒரு முறை சாப்பிட்டால்
கூட போதும் அது இருதயநோயால் ஏற்படும் மரணத்தை
பாதியாக குறைக்கிறது என்றும்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த
கண்டுபிடிப்பு இன்டர்னல் மெடிசின் என்ற
மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு
உள்ளது.
கறுப்பு சாக்லெட்டில் நோய்களை குணமாக்கும்
தன்மை உள்ளது. சாக்லெட்டில் உள்ள
ஆன்டிஆக்சிடன்ட்ஸ் எனப்படும் சத்து
ரத்தக்கட்டி ஏற்படுவதை தவிர்க்கிறது.
புற்றுநோய் ஏற்படுவதற்கு எதிராக
பாதுகாக்கிறது.மேலும் வயதாவதில் இருந்து உடலை
பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்தனர்.