|
ஸ்டெம் செல்களுக்கு புதிய மூலம்
ஸ்டெம்
செல் ஆராய்ச்சியில்
2008-ம்
ஆண்டு,
ஒரு முக்கியத்துவம் வாய்ந்த
ஆண்டாக
அமைந்துள்ளது.
அம்னியாடிக் ப்ளூயிட் டிரைவ்ட்
ஸ்டெம் செல்களை சுருக்கமாக
ஏ.எஃப்.எஸ்
(AFS)
என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த அரியவகை ஸ்டெம் செல் மனித
உடலில் உள்ள
220
விசேஷமான செல் மாதிரிகளில்
பலவற்றை உருவாக்க உதவும்
ஆற்றல் கொண்டது என்று
ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த
ஏ.எஃப்.எஸ்
செல்கள்,
கரு செல்களுக்கும் வயதுக்கு
வந்தோரின் ஸ்டெம்
செல்களுக்கும் இடைப்படியான
ஆற்றல் வாய்ந்த உபயோகரமான செல்கள் என்பது
மருத்துவ ஆராய்ச்சியாளர்களின்
நம்பிக்கை.
மரபணுக் கோளாறுகளைக்
கண்டுபிடிக்க
உதவும் நடைமுறைக்கு இது மிக,
மிக முக்கியமானதாகும்.
குழந்தை பிறந்த
பின்னர் தாய்மார்கள் இழக்கும்
திசுக்களும் ஏ.எஃப்.எஸ்
செல்களுக்கு இன்னொரு
மூலமாகும்.
அமெரிக்காவில் வருடத்திற்கு
40
லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
இந்தியாவிலோ இன்னும் அதிகம்.
இந்த நிலையில் ஏ.எஃப்.எஸ்
செல்கள் ஏராளமான
வியாதிகளைத் தீர்க்க உதவும்
என்பதால் இது மிகவும் முக்கியமான செய்தியாகும்.
உலகம் முழுவதிலும் இருக்கும்
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வருங்காலத்தில்
ஸ்டெம் செல் ஆராய்ச்சியில்தான்
அதிகக் கவனம் செலுத்தப் போகின்றனர்.
|