|
மூளையைத் தாக்கும் பன்றிக் காய்ச்சல்:மும்பை
மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
மும்பை:நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறை
உருவாக்கும்,
பன்றிக் காய்ச்சலுக்கான எச்1
என்1
வைரஸ்,
இப்போது மூளை
மற்றும் பிற உறுப்புக்களையும் தாக்கும் என,
மும்பை டாக்டர்கள்
கண்டறிந்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் மும்பை உள்ளிட்ட
மகாராஷ்டிர மாநிலப்
பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவ ஆரம்பித்தது. கடந்த மே
மாதம்,
மாநிலம் முழுவதும்
96
ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 143
பேருக்கு,
“பாசிடிவ்’
இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இவர்களிலும் 21
பேர்,
எச்1என்1
வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர்.ஜூன் மாதம்
மட்டும் 114
பேருக்கு,
“பாசிடிவ்’
இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில்
64
பேர்,
மும்பையைச் சேர்ந்தவர்கள். புனே நகரை,
கடந்த ஆண்டில் பன்றிக்
காய்ச்சல் பெருமளவில் தாக்கியிருந்தது. அதனால் இந்த ஆண்டில்
புனே நகரைச்
சேர்ந்தவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரித்திருந்ததாக டாக்டர்கள்
தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,
பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1
என்1
வைரஸ்,
நுரையீரலைப் பாதித்து சுவாசக் கோளாறை உருவாக்குவதோடு,
இப்போது மூளை மற்றும் பிற
உறுப்புக்களையும் தாக்கத் தொடங்கியிருப்பதை
டாக்டர்கள்
கண்டறிந்துள்ளனர்.அதேநேரம்,
தற்போது எச்1என்1
வைரசுக்கு என்ன மருந்து
கொடுக்கப்படுகிறதோ அதுவே போதுமானது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:எச்1என்1
வைரசால் பாதிக்கப்பட்ட
அனைவரிடமும்,
காய்ச்சல் இதன் அறிகுறியாக வரவில்லை என்பதைக்
கண்டறிந்துள்ளோம். தற்போது அந்த வைரஸ் நரம்பு தொடர்பான நோய்களை
உருவாக்குகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட மூன்று இறப்பு
அறிக்கைகளைப்
பொறுத்தவரை,
இறந்தவர்களில் 75
சதவீதம் பேர் நீரிழிவு மற்றும் அதிக ரத்த
அழுத்தம் உடையவர்கள். மீதி
25
சதவீதம் பேர் வைரசால் பாதிக்கப்பட்ட பின்
மிகத் தாமதமாக சிகிச்சைக்கு வந்தவர்கள்.இந்த வைரஸ் குறித்து
மேலும் ஆய்ந்து
வருகிறோம். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம்
சிகிச்சை செய்யும் அனைத்து
டாக்டர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு
டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
|