|
முகத்தில் சுகம் பார்க்கலாம்!
தூக்கம் இல்லையா,
நினைவாற்றல் குறைகிறதா, மன அழுத்தம்
அதிகமாக இருக்கிறதா - முகத்தை விரல்களால்
நன்கு அழுந்தத் தேயுங்கள், அல்லது இரு
கைகளாலும் முகத்தை நன்றாக மசாஜ்
செய்வதைப்போல இதமாக பிடித்துவிடுங்கள்.
முதலில் சொன்ன மூன்றிலிருந்தும் உடனடி
நிவாரணம் கிடைக்கும்.
முகத்தில் உள்ள வர்மப்
புள்ளிகளைத் தொட்டும் தடவியும்
தேய்த்துவிட்டும் இதமாக பிடித்துவிட்டும்
செய்துகொள்ளும் இந்த சிகிச்சை முறைக்கு
ரிஃப்ளக்ஸôலஜி என்று இப்போது பெயர்.
முகத்தைக் கைகளால்
தடவினால் மெழுகுபோல எண்ணெய் பிசுபிசுப்போ
அல்லது மணலைப் போல கரடுமுரடுகளோ கையில்
படும். இதில் எதுவாக இருந்தாலும் அது உடல்
சோர்வின் அடையாளம். முகத்தில் ஏராளமான
நரம்புகளும் ரத்தக் குழாய்களும் உள்ளன.
அவற்றில் "டிராஃபிக் ஜாம்' ஏற்பட்டால்
உடல் சோர்வும் தூக்கமின்மையும்
நினைவாற்றல் குறைவும் ஏற்படும். அப்போது
முகத்தை லேசாக வருடுவதும் (உங்களுக்கு
நீங்களேதான்), அழுத்தி விடுவதும் பலனைத்
தரும் என்கிறார் லண்டனில் இப்போது
பிரபலமடைந்து வரும் ரிஃப்ளக்சாலஜிஸ்ட்
நிக்கி ஆரிஃப்.
டாக்டர் ஆன்டன் இமானுவேல்
என்பவர் இத்தகைய சிகிச்சை முறையில்,
மலச்சிக்கல் ஏற்பட்ட நோயாளிகளுக்குக் கூட
நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்கிறார்.
அவரிடம் 19 நோயாளிகள் மலச்சிக்கல்
பிரச்னைக்காக வந்தனர். அவர்களிடம் இந்த
சிசிச்சை முறையை ஆன்டன் இமானுவேல்
கையாண்டார். 18 பேருக்கு எந்தவித மருந்து
மாத்திரையும் இல்லாமல் பிரச்னை
தீர்ந்ததுடன் நல்ல உற்சாகத்துடன்
ஆரோக்கியமாக வாழ்க்கையை நடத்த
ஆரம்பித்துவிட்டனர்.
உடலில் எந்தப் பகுதியில்
வலி ஏற்பட்டாலும் அதன் எதிரொலி மூளையில்
ஏற்படும். மூளைக்கு இதனால் வேலை அதிகமாகி
அதுவும் சோர்ந்துவிடும். அதனால்
நரம்புகளும் வேலைப்பளு காரணமாக தளர்ந்து
சோர்ந்துவிடும். இப்படி அவற்றைப்
பிடித்துவிட்டு உற்சாகப்படுத்தினால்
மூளைக்கு பணிப்பளு குறையும் நரம்புகளுக்கு
புத்துணர்ச்சி கிடைக்கும்.
|