Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

  மிளகாயில் விற்றமின் c சத்து

 


மிளகாயில் விற்றமின்cசத்து காணப்படுகின்றது இதில் காணப்படும் விற்றமின்cசத்தானது தக்காளிப்பழத்தில் காணப்படும் விற்றமின்cசத்தினை விட 9மடங்கு அதிகமாகும் அப்படிப்பட்ட மிளகாயைகாயவைத்தது பெறப்படுவதே செத்தமிளகாய்(காய்ந்தமிளகாய்)ஆகும் மிளகாயுடன் ஆயுள்வேதம் சித்தவைத்தியம் யுனானி ,இருதயநோய்,பல்சம்பந்தபட்டநோய்கள்,சளி,கோழை, இருமல்,விஷமுறிவு போன்ற பல நோய்களுக்கும் பயன்படும் மிளகும்,வயிற்றுப்பகுதியை சீரமைப்ப தில் பங்காற்றும்,கார்ப்பு இனிப்பு சுவையுடன் குளிர்ச்சித் தன்மையும்,மணம் சுவை செரிமானத்தன்மைக்காக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிற சீரகத்தில் காபோவைதரேட்டு,கொழுப்பு,புரோட்டின்,நீர்சத்து,விற்றமின்a,b2,b3,b6,b9,b12,m,c,e k,கல்சியம்,இரும்பு, மக்னீசியம்,பொஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம் போன்ற பலசத்துகள் அடங்கியசீரகமும் பலசத்துகள் அடங்கியதும் பல நோய்களை மாற்றக்கூடிய மஞ்சள், கறுவாபட்டை(பட்டை),கருவப்பிலை,கடலைப்பருப்பு ஆகியவை யாவும் கலந்துசுவையுடன் செய்யப்பட்டது இலங்கை மிளகாய்த்தூள் .

தேவையான பொருட்கள்

  • செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - 250 கிராம்

  • மல்லி(தனியா) - 250 கிராம்

  • சின்னசீரகம்(சீரகம்) - 1 மேசைக்கரண்டி

  • பெருஞ்சீரகம்(சோம்பு) - 1 மேசைக்கரண்டி

  • மிளகு - 1 தேக்கரண்டி

  • மஞ்சள்துண்டு - 1 சிறியதுண்டு

  • கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

  • அரிசி - 1மேசைக்கரண்டி

  • கருவப்பிலை - சிறிதளவு

  • கருவாப்பட்டை(பட்டை) - சிறிய துண்டு


செய்முறை

  • மல்லியை(தனியாவை) துப்பிரவு செய்து கழுவி அதனை ஒரு தட்டில் போட்டு நன்றாக காயவிடவும்.

  • நன்றாககாய்ந்த(ஈரமில்லாமல்)மல்லியை(தனியாவை) ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

  • செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை)துப்பிரவாக்கவும்

  • அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதனை சூடாக்கி அதில் செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை) போட்டு அதனை ஓரளவாக வறுக்கவும்.

  • ஓரளவுவறுத்தசெத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை) எடுத்து ஒருதட்டில் போட்டு வைக்கவும்.

  • செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை)3துண்டுகளாக வெட்டவும்(இலகுவாக கிரைண்டரில்(மிக்ஸியில்) அரைப்பதற்காக).

  • பின்பு அடுப்பில் உள்ள தாட்சியில்(வாணலியில்) மல்லி(தனியாவை)மெல்லிய சூட்டுடன் வறுக்கவும்.

  • மெல்லியசூட்டுடன் வறுத்தமல்லியுடன்(தனியாவுடன்) மிளகு,சினனசீரகம்(சீரகம்)பெருஞ்சீரகம்(சோம்பு), மஞ்சள்துண்டு,கருவப்பிலை,கருவாப்பட்டை(பட்டை) ஆகியவற்றை போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.

  • வறுத்தபின்பு இதனை வறுத்த செத்தல்மிளகாயுடன் (காய்ந்தமிளகாயுடன்)போட்டு வைக்கவும்.

  • பின்பு அடுப்பில்உள்ள தாட்சியில் கடலைப்பருப்பை போட்டு ஓரளவு வறுக்கவும் .

  • வறுத்தகடலைப்பருப்பை செத்தல்மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்) போடவும்.

  • அடுப்பில் தாட்சியை வைத்து அதில் கழுவிதுப்பிரவு செய்த அரிசியை போட்டு வறுக்கவும்.

  • வறுத்தஅரிசியை செத்தல்மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்)போடவும்.

  • வறுத்த யாவற்றையும் சிறிதுநேரம் ஆறவிடவும்.

  • ஆறியபின்பு வறுத்து இரண்டாகவெட்டிய செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்)வறுத்து வைத்திருக்கும் மல்லி(தனியா),மிளகு,சின்னசீரகம்(சீரகம்),பெருஞ் சீரகம்(சோம்பு),மஞ்சள்துண்டு,கருவப்பிலைகருவா ப்பட்டை ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நன்றாக அரைக்கவும்.

  • நன்றாக அரைத்தபின்பு அதனை எடுத்து அரிதட்டில் போட்டு மா போல அரிக்கவும்.

  • நன்றாக அரித்தபின்பு அரிபடாமல் இருப்பவற்றை திரும்பவும் எடுத்து கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு அரைக்கவும்.

  • திரும்பவும் அரைத்தவற்றை எடுத்து அரிதட்டில் போட்டு மா போல அரிக்கவும்.

  • இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.

  • எல்லாவற்றையும் அரைத்து முடிந்தபின்பு அரைத்த வற்றை சிறிது நேரம் ஆறவிடவும்.

  • சிறிது நேரத்தின் பின்பு ஆறியவற்றை எடுத்து ஒரு போத்தலில் போட்டு காற்று உட்புகாதவாறு மூடி வைக்கவும்.

  • அதன் பின்பு மிளகாய்த்தூள் தேவைப்படும் போது தேவையானளவில் எடுத்து பயன்படுத்தவும்.


குறிப்பு:

எச்சரிக்கை - அல்சர்நோயாளர் வைத்தியரின் ஆலோச னைப்படி உண்ணவும். மாற்றுமுறை - கிரைண்டரில்(மிக்ஸியில்அரைப்பதிற்கு பதிலாக வறுத்தமிளகாயை மிளகாய்த்தூள் அரைக்கும் மில்லில் கொடுத்து அரைக்கலாம். கவனிக்க வேண்டிய விசயங்கள் -வறுக்கும் போது வறுக்கபடும் பொருட்கள் கருகாமல் வறுக்கவும், குழந்தைகளை வைத்து கொண்டு மிளகாய்த்தூளை தயாரிக்கவேண்டாம்,மிளகாய்த்தூளை தயாரிக்கும் போது மிக மிக கவனமாக தயாரிக்கவும்.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved