Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

    

 

 

மார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு.

 

                                இது அவசர யுகம். ஆற அமர யோசிக்க நேரமில்லை. வீட்டில் உணவு தயாரிக்கவும், விருந்தினருடன் உட்கார்ந்து   சாப்பிடவும் நமக்கு நேரமில்லை. நம் நாட்டு உணவகங்களிலும் குறிப்பாக துரித உணவகங்களிலும், பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்தும்  எண்ணையினை ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை மீண்டும், மீண்டும் சூடு படுத்தி பயன்படுத்துகின்றனர். 

                           
சமையல் எண்ணெய்களை, குறிப்பாக, ரீபைண்ட்  எண்ணையினை, ஒரு முறை சூடு படுத்தினால், ஒன்றுமில்லை. பல முறை, மீண்டும், மீண்டும், சூடுபடுத்தும்போது, அதில் கேன்சரை உருவாக்கும் காரணிகள் உருவாகி, வயிற்று புற்றுக்கு வழி வகுக்கும். அதிக எடை போடுதல் மற்றும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளாதது ஆகியவை புற்று நோய்க்கான கூடுதல் காரணிகளாகும். 


                                 
இந்தியாவில், ஆண்டு ஒன்றிற்கு, பத்து லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கபடுகின்ற்றனர்.  குறிப்பாக புற்று  நோயால் பாதிக்கபடுவோர்களில் ஆறு லட்சம் பேர் நோய் முற்றிய நிலையிலையே மருத்துவர்களை நாடுகின்றனர். முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. உலக புற்று நோய் தினத்தன்று,காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்காட்சியை திறந்தது வைத்து பேசும்போது, தமிழக சுகாதார துறை செயலர், மார்பக புற்று நோய்க்கு, ஆஸ்த்ரேலியாவில் புதிய மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற நல்ல தகவல்  ஒன்றை கூறியுள்ளார்.                                 

                           நாற்பதை எட்டிய பெண்களில் பலருக்கு, மார்பக புற்று நோய் என்பது நாளும் தொல்லை தரும் ஒரு பிரச்னை. மார்பக புற்று நோய்க்கான காரணங்களை மேலோட்டமாகப் பார்த்தால், மனிதனால், மாற்ற தகுந்தவை, மாற்ற இயலாதவை என  இரு வகையாய் அவற்றை பிரிக்கலாம்.

மாற்றத்தகுந்தவை                                            மாற்ற இயலாதவை   

 

உடல் எடை                                                        வயது

புகை பிடித்தல்                                                          ஜீன்கள்

மது அருந்துதல்                                                         பரம்பரை

சத்தான உணவு உண்ணுதல்                       

           இவை தவிர உயிர்ச்சத்து-டி குறைபாடு, உணவு,பிளாஸ்டிக், சன்ஸ்கிரீன், தண்ணீர் மற்றும் அழகு சாதன பொருட்களிலுள்ள வேதிப்பொருட்கள், பெண்களின் உடலில் வினை புரிதலும் மார்பக புற்று நோய் வர வழி வகுக்கின்றன

எப்படி கண்டுபிடிப்பது?

                    மேமோகிராம், மார்பக எம்.ஆர்.. மற்றும் பயாப்சி போன்ற பரிசோதனைகள் மூலம், மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுகொள்ளலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமானது, நாற்பது வயதைக்கடந்த ஒவ்வொரு பெண்ணும், மார்பக சுய பரிசோதனையை, மாதம் ஒருமுறை மறக்காமல் செய்வதுடன், ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக குடும்ப மருத்துவரிடம் ஆலோசனையும் பெறவேண்டும்.

                   சமீப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பரிமாண நுண்கதிர் மேமோகிராபி, மற்றும் Taxotere  உடன் cyclophosphamide சேர்த்து கொடுக்கப்படும் மருந்தும், மார்பக புற்று நோயாளிகளிடம் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரும்.
              
மார்பக புற்று நோய்க்கு ஆஸ்த்ரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தின் விலை வெறும் மூவாயிரம் மட்டுமே. இந்த்த மருந்தை நம் மத்திய அரசு அங்கீகரித்து அனுமதிக்கவில்லை. அரசு அனுமதித்தவுடன், இந்தியாவில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும்.   
                         
தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் தாக்காது என கண்டுபிடித்துள்ளனர்.

 

 


Home

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved