Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

மனித உடலில் புதிய வகையான கொழுப்பு கண்டுபிடிப்பு

நமது உடலில் எச்.டி.எல் மற்றும் எல்.டி.எல் கொழுப்புகள் இருப்பது பற்றி நமக்குத் தெரியும். ஆனால் பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்குக் கூடிய கொழுப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் ரத்தத்தில் காணப்படும் கொழுப்பு பொருள். நமது உடலில் காணப்படும் கொழுப்புகளில் எச்.டி.எல்இ எல்.டி.எல் என்று இரண்டு வகை உள்ளன. இதில் எச்.டி.எல் கொழுப்பு நம் உடலுக்கு நல்லது செய்கிறது. ஆனால் எல்.டி.எல் கொழுப்பு தீமை செய்வது. இந்த கொழுப்பு நீரில் கரையாது.

இவை உணவில் இருந்து குடல் வழியாக உறிஞ்சப்பட வசதியாக பித்த நீர் தேவைப்படுகிறது. அப்படி கரைந்த கொழுப்புகள் நுண்மூலக் கூறுகளாக ரத்தத்தில் எடுத்து செல்லப்படுகின்றன.

நாம் சாப்பிடும் உணவில் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தாலும்இ கொழுப்பு சேமிப்பு சதையில் இருந்து தேவையான கொலஸ்ட்ராலை உடல் உற்பத்தி செய்து கொள்ளும். கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகமாக இருந்தால் ரத்தக் குழாய்களின் உட்சுவரில் படிந்து அவற்றின் உள்விட்டம் குறைந்துஇ அவை சுருங்கி விரியும் தன்மை பாதிக்கிறது. இதனால் தான் ரத்த ஓட்டம் பாதிக்கிறது.

மேலும் கொலஸ்ட்ராலை தொடர்ந்து கால்சியம் போன்ற தாது உப்புகளும் படிந்து ரத்தக் குழாய்களை பலவீனமடையச் செய்கிறது. இந்த கொலஸ்ட்ரால் அயோட்டா போன்ற பெருநாடிகள் முதல் இதய தசைகளுக்கு ரத்தம் வழங்கும் சிறிய இருதய குழாய்களை பாதித்துவிடுகிறது.

இதனால் இதய நோய்இ ரத்த நாடி நோய்கள்இ பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இப்படி கொலஸ்ட்ரால் நம்மை பாடாய்படுத்தி வரும் நிலையில் இப்போது புதியதாய் ஒரு கொலஸ்ட்ரால் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு குழு இந்த புதிய கொலஸ்ட்ரால் மனித உடலில் இருப்பதை கண்டறிந்துள்ளது. இதற்கு எம்ஜிமின்-எல்டிஎல்என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த புதிய வகை மோசமான கொலஸ்ட்ரால் நமது உடலில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலை விட அடர்த்தி அதிகம் உள்ளது. இது வயதானவர்கள் மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களிடம் பரவலாக காணப்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இந்த கொலஸ்ட்ரால் அமைப்புஇ ரத்த நாளங்களை தடிமனாக்கும் தன்மை ஆகியவற்றால் ரத்தம் உறைதல் மற்றும் மாரடைப்பையும் ஏற்படுத்துமாம். இதுவரை எல்.டி.எல் கொழுப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை செய்து வந்த டாக்டர்கள் இனிமேல் எம்ஜிமின்-எல்டிஎல் கொழுப்பு அதிகரித்து அதனால் ஏற்படும் ரத்த நாள நோய்களை தடுக்க போராட வேண்டியிருக்கும் என்று வார்விக் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

கொலஸ்ட்ரால் டெஸ்ட் எடுப்பவர்கள் இனிமேல் எம்ஜிமின்-எல்டிஎல் கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved