|
பரம்பரை நோய்களை முறியடிக்கும் நவீன மருத்துவ
கண்டுபிடிப்பு.
மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின்
ஒரு நுண்ணுறுப்பு,
'மைட்டோகான்ட்ரியா!'
இது தான் ஒரு செல்லுக்கு சக்தியை
வழங்குகிறது.இதில்
ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக்
காரணம் என்றும்
அவ்வாறு கருமுட்டைகளில்
மாற்றம் செய்வதன் மூலம்,
பரம்பரை நோய்கள் மற்றும்
அரியவகை நோய்களையும் முறியடிக்கலாம் என்று,
பிரிட்டன் டாக்டர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
உலகளவில்,
6,500
பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத்
தீவிரமாகத்
தாக்குகின்றனவாம். உதாரணமாக தசைப் பலவீனம்,
செவிட்டுத் தன்மை,
இதயச்
செயலிழப்பு,
கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர
உடல்நலப் பாதிப்புகள்
போன்ற உபாதைகள் ஏற்படுவதை முற்றிலும்
நீக்குவதற்கான ஒரு புதிய வழிமுறையைக்
கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி,
செயற்கைக் கருத்தரிப்பு முறையில்,
விந்தணு சேர்க்கப்பட்ட
குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து,
அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்)
நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள
கருமுட்டையிலுள்ள உட்கரு,
ஏற்கனவே
உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில்
வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய்
பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின்
அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும்
காரணத்தால் பரம்பரை நோய் மற்றும் அரிய வகை
நோய்கள் வர வாய்ப்பு கிடையாது.
Home
|