|
புற்றுநோய் ஆய்வில் புதிய வெற்றி!
புற்றுநோயாளிகளைக்
குணப்படுத்த புதிய வழிமுறை
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்
கட்டிகளில் உள்ள புற்று வைத்த திசுக்களை
அழிக்க, பரவாமல் தடுக்க, நோயாளிகளைக்
குணப்படுத்த செலுத்தப்படும் ஊசி மருந்தும் இதர
சிகிச்சை முறைகளும் தோல்வி அடைவது ஏன் என்பது
கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
புற்றுநோய் பாதித்த
திசுக்களுக்குச் செல்லும் மருந்தின்
வீரியத்தைக் குலைத்து அதை வேலை செய்ய விடாமல்
தடுக்கும் "ஸ்ட்ரோமல் செல்' எது என்பதை
விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுவிட்டனர். சோதனைச்
சாலையில் எலிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கி
அதன் பாதிக்கப்பட்ட திசுக்களுக்குச் செல்லும்
மருந்து வேலை செய்யாமல் தடுக்கும் செல்களை
அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவற்றைக்
கொன்றனர். அதன் பிறகு மருந்து வேகமாக வேலை
செய்து புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டு நோய்
குணமானது. இதை மனிதர்களுக்கும்
விரிவுபடுத்துவதற்கு முன் மேலும் சிலமுறை
சோதனைகளை நடத்தி உறுதி செய்ய
வேண்டியிருக்கிறது.
புற்றுநோய் பாதித்த
நோயாளிகளின் புற்றுக் கட்டிகளில் எப்.ஏ.பி.
என்கிற அந்த ஸ்ட்ரோமல் செல்கள் இருப்பதை
லாயிட் ஓல்ட் என்ற விஞ்ஞானியும் அவருடைய
சகாக்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னரே
&
|