Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 கண்டுபிடிப்புகள்

 

ஒட்டக பால் - சிறுநீர் கலந்த மருந்து: புற்றுநோயை குணப்படுத்தும் அதிசயம்!

 

 

ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து, புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகில், ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் புற்றுநோயின் காரணமாக இறந்து வருகின்றனர். அரபு நாடுகளில், இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கு அடுத்தபடியாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக, புற்றுநோய் மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகளை, அரபு பயோ டெக்னாலஜி நிறுவனம் மேற்கொண்டது. பல்வேறு அரபு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

அவர்கள், ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகையான மருந்தை தயாரித்தனர். இந்த சோதனைக்கு, அவர்கள் எலிகளை பயன்படுத்தினர். எலிகளின் உடலில் புற்று செல்களைப் புகுத்தி, அவற்றிற்கு புற்றுநோயை உண்டாக்கினர்.

பின், ஒட்டகப் பால், சிறுநீரினால் தயாரித்த மருந்தை 6 மாத காலத்திற்கு எலிகளுக்கு கொடுத்தனர். இந்த மருந்தின் மூலமாக, எலிகளுக்கு இருந்த புற்றுநோய் குணமானது.

எலிகளின் உடலில் இருந்த புற்று செல்கள் அனைத்தும் நீங்கி, வீரியமுள்ள புதிய செல்கள் உருவாகி இருந்தது. தற்போது, இந்த எலியானது மற்ற எலிகளைப் போல் மிகவும் ஆரோக்கியமாக துள்ளி விளையாடுகிறது.

ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், அவை புற்று செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்குகிறது.

இந்த மருந்தினால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தினைப் பயன்படுத்தினால், புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டமாக, மனிதர்களின் உடலுக்குள் இந்த மருந்தினைப் புகுத்தி, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதிலும், வெற்றி பெற்றால் மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.

 


Home

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved