Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

  ஆயுள்வேதம்

 


             

 

வாயுத் தொல்லையைப் போக்கும் வெள்ளைப் பூண்டு

 

இயற்கை வைத்தியம் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தப் பகுதியில் அறிந்து வருகிறோம்.

ஏற்கனவே மிளகு, மஞ்சள் பால் பற்றி அறிந்தோம். தற்போது வெள்ளைப் பூண்டு பற்றி அறிவோம்.

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.

ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும்.

வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.

முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.

பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.

எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved