சர்க்கரை நோயை குழந்தைகளுக்கு
ஏற்படும் சர்க்கரை நோய், பெரியவர்களுக்கு
ஏற்படும் சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கு
ஏற்படும் சர்க்கரை நோய் என மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்:
அதிகப்படியான சிறுநீர்
கழிப்பது, அதிக அளவில் தாகம் ஏற்படுவது,
அடிக்கடி தோன்றும் பசி உணர்வு ஆகியவை சர்க்கரை
நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் முதல்
வகை குழந்தை சர்க்கரை நோயாளிகளுக்கு வெகு
வேகமாக அதிகரிக்கும். ஆனால், இரண்டாவது வகை
சர்க்கரை நோயாளிகளுக்கு (பெரியவர்கள்) மிக மிக
மெதுவாகவும், கண்டுபிடிக்க முடியாதவாறும்
அல்லது அறவே இல்லாதவாறும் தோன்றும்.
சர்க்கரை நோய்க்கான
காரணங்கள்: 1.
வாழ்வியல் மாற்றங்கள்; 2. முறையற்ற உணவுப்
பழக்கங்கள்; 3. நீண்ட நேர பகல் தூக்கம்; 4.
உடற்பயிற்சி இன்மை; 5. மன அழுத்தம்; 6.
பாரம்பரிய காரணங்கள்.
நோயாளியின் உடற்கூறு, வயது,
பாலினம், குடும்பப் பின்னணி, நோயின் நிலை
இவற்றை ஆராய்ந்த பின்னரே ஆயுர்வேத சிகிச்சை
அளிக்கப்படுவதால், நோயாளிக்குப் பொருத்தமான
அளவில் சிகிச்சை அமைகிறது. சாந்திகிரி
ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவமனையில்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறந்த
மருந்துகள் அளிக்கப்படுகின்றன.இங்கு தரப்படும்
பஞ்சகர்மா சிகிச்சை முறைகளில் உடலினுள் உள்ள
நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.
விரேச்சனம், அபயங்கா,
ஸ்வேதனம், ரசாயன சிகிச்சை, தக்கராதரா,
பிழிச்சல், இலகிழி எனும் வெவ்வேறான ஆயுர்வேத
சிகிச்சைகளினால் சர்க்கரை நோய்க்கு மிகச்
சிறந்த முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது.
மருந்துகள் மட்டுமின்றி, சீரான உணவு,
உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை மூலமும்
உடலின் சர்க்கரை அளவை இயல்பான அளவில்
வைத்துக்கொள்ளும் வகையில் அறிவுறுத்தல்கள்
வழங்கப்படும்.