ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய்க்குப்
பஞ்சகர்மா
சிகிச்சை
உடலிலுள்ள பெரிய, சிறிய
எலும்பு இணைப்புகள் அனைத்திலும் வலி ஏற்பட்டு
அங்கிங்கு நடமாட முடியாமல் செய்வது ருமாட்டைட்
ஆர்த்தரைட்டிஸ் நோய் எனப்படுகிறது. உடலிலுள்ள
எல்லா பெரிய மற்றும் சிறிய எலும்பு இணைப்புகள்
இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன.
ஒருகட்டத்தில் நுரையீரலும் பின்னர்
இதயத்தையும் இந்த நோய் பாதிக்கச் செய்கிறது.
தோல் தொடர்பான பிரச்னைகளும் உருவாகும். உலக
மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் இந்த நோயால்
பாதிக்கப்படுகிறார்கள் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும்
பெண்களையே தாக்குகிறது. அதுவும் 40 முதல் 50
வயதுடைய பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக
இருக்கும். இந்த நோய் தாக்குவதால் எலும்பு
இணைப்புகளில் வலி அதிகமாக இருக்கும். இதனால்
எலும்பு இணைப்புகளை அசைக்க முடியாத நிலை
ஏற்படும்.
கண்டறியும் முறை :
ஒருவர் ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோயால்
தாக்கப்பட்டதை ரத்தப்பரிசோதனை மூலம் தெரிந்து
கொள்ளலாம். ரத்தத்தில் ருமாட்டைட் நோயை
உருவாக்கும் கிருமிகள் இருந்தால், அவர்களுக்கு
ரூமைட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய் இருப்பதாக
அர்த்தம்.
இந்த நோய் தாக்கியவர்களுக்கு :
1. எலும்பு இணைப்புகள் வீக்கமாகும்
2. எலும்பு இணைப்புகள் சூடாகும்
3. சிவப்பு நிற வீக்கங்கள் ஏற்படும்
4. வலி அதிகமாக இருக்கும்
5. எலும்பு இணைப்புகளை அசைக்க முடியாத நிலை
ஏற்படும்
6. நாளாகும்போது வலியும் அதிகமாகும்.
நுரையீலுக்குள் ஃபப்ரோசிஸ் உருவாகும்,
சிறுநீரகத்தில் புரதங்கள் படியும், மாரடைப்பு
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்,
பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சிகிச்சை:
நவீன மருத்துவம்
நவீன மருத்துவத்தில் இந்த நோய்க்கான
சிகிச்சையில் வலி நிவாரணிகள், வீக்கத்தைக்
கட்டுப்படுத்தும் மருந்துகள், ஸ்டீராய்டுகள்,
பென்சிலின் மருந்து ஆகியவை
பயன்படுத்தப்படுகின்றன. இதன் பிறகு உடலில்
இருந்த வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
மூட்டு இணைப்புகள் இயல்பு நிலைக்குத்
திரும்பும்.
ஆயுர்வேதம் :
உடம்புக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல்
இருக்கும்போதுதான் இந்த நோய் தாக்குகிறது.
அதனால், உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத்
தருவதற்கான சிகிச்சைகளை முதலில் மேற்கொள்ள
வேண்டும். பின்னர் உடலுக்குப் புத்துணர்வு
தருவதுடன், மீண்டும் நோய் தாக்காமல்
இருப்பதற்காக அதிக ஊட்டம் தர வேண்டும்
எதிர்ப்பு சக்தி
நோயாளிக்கு முதலில் பசியைத் தூண்டக்கூடிய
மூலிகைகள் அடங்கிய கசாயம் தர வேண்டும்.
முறையாகப் பசித்தாலே உடம்பிலுள்ள நச்சுக்கள்
ஒழிக்கப்பட்டுவிடும். காட்டுத் திப்பிலி வேர்,
சுக்கு, சிட்ரத்தை (ராஸ்னா), காட்டு மிளகின்
வேர் ஆகிய மூலிகைகள் இந்தக் கசாயத்தில்
இருக்கும். இது தவிர, உடல் அமைப்பைப்
பொருத்து, வேறு சில மூலிகளையும் சேர்த்துத்
தரலாம். இந்த மூலிகைகளைக் கொண்ட
பெலாகுலுஜ்யாதி கசாயம், சகஜராதி கசாயம்,
குலுஜ்யேதி கசாயம் போன்றவை தற்போது கடைகளில்
கிடைக்கின்றன. இவற்றை மருத்துவர்களின்
ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
14 நாள்கள் சாப்பிட்ட பிறகு, பேதிக்கு மருந்து
தர வேண்டும். பின்னர் தொடர்ந்து 3 நாள்கள்
ஸ்னேக பானம் (நெய்) தர வேண்டும். இதன் பிறகு
மீண்டும் பேதிக்கு மருந்த தர வேண்டும். முன்பு
தரப்பட்ட நெய், இதன் மூலம் நஞ்சாக
வெளியேறிவிடும்.
உடலுக்குப் புத்துணர்வு தர :
உடலுக்குப் புத்துணர்வு அளிப்பதற்கு 'தைலதார'
சிகிச்சை தர வேண்டும். கொட்டஞ்சுக்காதி
எண்ணெய், பிண்ட தைலம், குளுச்யாதி தைலம் ஆகியை
இந்தச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
4 நாள்கள் இந்தச் சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு,
வலி முழுவதுமாக மறைந்துபோகும்.
ஊட்டமளிக்க :
உடலில் ரூமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் மீண்டும்
வராமல் தடுப்பதற்கு உடலில் நவர அரிசியுடன்
வேறு சில மருந்துகளும் சேர்த்து ஒத்தடம்
கொடுக்க வேண்டும். அல்லது நவர அரசியுடன் வேறு
சில மருந்துகளைச் சேர்த்துப் பசையாக்கி உடல்
மேல் தடவ வேண்டும். இதனால், உடலுக்கு ஊட்டம்
கிடைக்கும்.
சிறு வயதிலிருந்தே ரூமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ்
நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு 22
வயதில் பஞ்சகர்மா சிகிச்சையளிக்கப்பட்டது.
தற்போது, நோய் குணமானதுடன், ஒரு குழந்தைக்கும்
தாயாகியிருக்கிறார்.
-டாக்டர் ஷாஜிராஜ்
|