Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

  ஆயுள்வேதம்

 

 

பிறவிக் குறைபாடுகள் வராமல் தடுப்பது எப்படி?

 

கருவுற்றிருக்கும் எல்லா அம்மாக்களுமே தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு விஷயம், 'என் குழந்தை நார்மலாக இருக்கிறதா?' என்பதைத்தான். அதிர்ஷ்டவசமாக நிறைய குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன்தான் பிறக்கின்றன. நூறு குழந்தைகள் பிறந்தால், அதில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே பெரிய அளவில் பிறவிக் குறைபாடுகள் இருக்கிறது. சில பிறவிக் குறைபாடுகளை பிறப்பதற்கு முன்னாலேயே கண்டுபிடித்து விடலாம். அதில் சிலவற்றை தடுக்கவும் முடியும்.

பிறவிக் குறைபாடு (Birth defect) என்றால் என்ன?

 

ஒரு கருமுட்டையும், ஒரு விந்தணுவும் சேர்ந்து, கோடிக்கணக்கான செல்களாக மாறி, எந்தத் தவறும் இல்லாமல் அது ஒரு மனித உயிராக உருவாவதைப் பற்றி எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் குழந்தை உருவாகும் போது எத்தனையோ விஷயங்கள் தவறுதலாக போவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது போல் நடப்பதில்லை. குழந்தை பிறக்கும் போது இருக்கும் குறைபாட்டைத் தான் பிறவிக்குறைபாடு என்று சொல்வார்கள். இது மிதமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

பிறவிக் குறைகளை குழந்தை பிறப்பதற்கு முன்னரோ, பிறக்கும் போதோ அல்லது பிறந்த பிறகோ எந்த நேரத்திலும் கண்டுபிடிக்க முடியும். சில பிரச்சினைகளை ஈஸியாக கண்டுபிடித்து சரி செய்ய முடியும். இதயக் கோளாறு அல்லது காது கேளாமை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிய சில ஸ்பெஷல் டெஸ்ட்டுகள் தேவைப்படலாம். சில குறைபாடுகள் வயதாக ஆகக் கூட கண்டுபிடிக்கலாம்.

பிறவி குறைபாடுகளின் வகைகள்

 

3,000-க்கும் மேலான பிறவிக் குறைபாடுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதை வடிவ ரீதியில் (Structural), மரபணுக்களால், தொற்று நோய்களால் அல்லது வீரியம் அதிகமான மருந்துகளால் வரும் குறைபாடுகள் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம்!

வடிவ ரீதியிலான குறைபாடுகள் (Structural)

 

இந்த வகையில் குழந்தையின் உடம்பில் ஒரு சில உறுப்புகள் முழுமையாக உருவாகி இருக்காது. இந்த குறைபாடுகள் உடலின் உள்ளே என்றால் உதாரணமாக இதயக் கோளாறு அல்லது உடலின் வெளிப்பாகத்தில் என்றால் உதாரணமாக உதடு கிழிந்து காணப்படுதல், அல்லது ஆறாவது விரல் இருத்தல் போன்றது. இந்த வகை பிறவிக் குறைபாடுகளுக்கு ஒரேயொரு காரணத்தைக்கூட சொல்ல முடியாது.

இதயக்கோளாறுதான் அதிகப்படியாக ஏற்படும் பொதுவான பிறவிக் குறைபாடு! இதில் சில இதயக்கோளாறுகள் மிகச் சிறிய கோளாறாக இருக்கலாம். சில வகை பிரச்சினைகளுக்குரிய இதயக் கோளாறுகளுக்கு சர்ஜரி தேவைப்படும். நரம்புக் குழாயில் ஏற்படும் பிரச்சினை, மற்றொரு பொதுவான வடிவ பிறவிக் குறைபாடு. முதுகுத் தண்டுவடத்தில் கட்டி இருத்தல் (Spinal bifida) அல்லது மண்டையோடு முழுமை அடையாமல் இருத்தல். (Anencephaly)

மரபணுக்கோளாறு (Genetic)

 

மரபணுக் கோளாறில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஜீன்கள் பெற்றோர்களிடம் இருந்து வரும் போது தவறிப் போவதோ, சிதைந்து போவதோ அல்லது எக்ஸ்ட்ரா குரோமோசாம்கள் வருவதோதான் மரபணுக்கோளாறுகளுக்கு காரணம்.

குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடுகள் கருத்தரிப்பின் போதே ஏற்பட்டு விடுகிறது. தாய்க்கு வயது அதிகமாக ஆக இது போன்ற குரோமோசோம் குறைபாடு அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. குரோமோசோம் குறைபாட்டினால் வரும் ஒரு பொதுவான பிரச்சினை 'டவுண் சின்ட்ரோம்!'

சில பிறவிக் குறைபாடுகள், மிக முக்கியமாக தாய் கர்ப்பமாக இருக்கும் முதல் மூன்று மாதங்களில் வரும் 'ரூபெல்லா' (ஜெர்மன் அம்மை) போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வரலாம்!

பிறவிக் குறைபாடுகள் வராமல் தடுப்பது எப்படி?

 

நிறைய பிறவிக் குறைபாடுகளை தடை செய்ய முடியாது. கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் நீங்கள் ஏதாவது மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டுமென்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் முதல் மூன்று மாதங்களில் தவறுதலான மருந்தைச் சாப்பிட்டால் கரு பாதிக்கப்படும்.

டயாபடீஸ், வலிப்பு போன்ற ஏற்கெனவே ஏதாவது பிரச்சினை இருக்கும் திருமணமான பெண்கள், கர்ப்பமாவதற்கு முன்னரே டாக்டரை பார்ப்பது நல்லது. இப்படிப் பார்ப்பதன் மூலம் கருத்தரிப்பதற்கு முன்னரே மருந்துகளில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அதைச் செய்து விடலாம்.

உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதித் தரும் டாக்டரிடம் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அதைச் சொல்லுங்கள். அதே போல, டாக்டரிடம் பேசாமல் அவர் சொன்னபடி நீங்கள் எடுத்துக் கொண்டு வந்த மெடிசன்களை நிறுத்தாதீர்கள்.

ஃபோலிக் ஆசிட் (Folic Acid)

 

ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அது நியூரல் டியூப் குறைபாடுகளான ஸ்பைனல் பஃபிடா (Spinal bifide) மற்றும் அனென்கெபேலியை (Anencephaly) தடுக்க உதவும். கருத்தரிப்பதற்கு முன்னாலும், கருத்தரித்த பிறகு முதல் மூன்று மாதம் வரைக்கும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

கருவின் நியூரல் டியூப் வளர்ச்சியடையும் போது தேவைப்படும் ஃபோலிக் ஆசிட், ஒரு பெண் தான் கருத்தரிப்பதை தெரிந்துகொள்ளும் முன்னரே தேவைப்படுகிறது. அதனால் கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் தினமும் 0.4 மில்லிகிராம் அளவுள்ள ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும். ஏற்கெனவே நியூரல் டியூப் குறைபாடுள்ள குழந்தையை வைத்திருக்கும் பெண்கள் தினமும் 4 மில்லிகிராம் அளவுள்ள ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால்தான் அடுத்த கர்ப்பத்தில் இந்தப் பிரச்சினை வராமல் தடைசெய்ய முடியும்.

பிறவிக் குறைபாடுகள் பற்றிய கட்டுக்கதைகள்!

 

பிறவிக் குறைபாடுகள் வருவதற்கான காரணங்களாக அந்தக்கால பாட்டிகள் சில கட்டுக்கதைகளை சொல்வதுண்டு. பிறவிக்குறைபாடுகளுக்கு கர்ப்பிணிகள் துணி தைப்பதோ, கிரகணமோ, ஆட்டோவில் போவதோ, சில பொஸிஷன்களில் தூங்குவதோ அல்லது சில உணவு வகைகளைச் சாப்பிடுவதோ காரணமல்ல!... பிறவிக் குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோர்கள் ஏற்கெனவே இது போன்ற குற்றவுணர்ச்சியில் இருப்பார்க

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved