Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

  ஆயுள்வேதம்

 

பாரம்பரிய இயற்கை வைத்திய முறை .

 

இன்றைய நவீன உலகில் பாரம்பரியம் மாறாத இயற்கை முறை வைத்தியம் உலக மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. பக்க விளைவுகள் இல்லாத இயற்கை முறை வைத்தியம் மூலிகைகள் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அலோபதி எனப்படும் ஆங்கில முறை வைத்தியம் படிப்படியாகச் செல்வாக்கை இழக்கிறது.

பாரம்பரிய வைத்திய முறைகள் அலோபதி வைத்தியத்தின் எழுச்சியால் நெடுங்காலம் பின்னடைவைச் சந்தித்தது உண்மையே. அலோபதி நோயைக் குணப்படுத்துவதோடு நின்று விடுகிறது. பாரம்பரிய வைத்தியம் நோயின் அடிப்படைக் காரணிகளுக்கு சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்துகிறது.

அலோபதி வைத்தியத்தில் ஆய்வுகூடத் தயாரிப்புகளான வேதியல் மாத்திரைகள்இ தூள்கள்;இ திரவங்கள் முக்கியமாகப் பாவிக்கப் படுகின்றன. ஊசி மூலமாகவும் மருந்துகள் நோயாளர் உடலில் செலுத்தப் படுகின்றது.

பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் நோய் முற்றாகக் களையப் படுவதில்லை என்றும் ஆங்கில வைத்திய முறை விமர்சிக்கப் படுகிறது. சிகிச்சை முடிந்தபின் நோயாளர்கள் நலம் பெற்றாலும் அதே நோய் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாரம் பரிய வைத்திய முறைகளில் பல ரகங்கள் உண்டு பழம் பெரும் நாகரிகங்களைக் கொண்ட மனித சமுதாயங்களில் அவை நெடுங்காலமாகக் காணப்படுகின்றன. இந்தியாவின் வடக்கில் ஆயுள் வேதம் என்ற வைத்திய முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் ஆயுள் வேதம் என்று பொருள்.

நான்கு வேதங்களான இருக்கு, அதர்வம், யசுர், சாமம் ஆகியவற்றிற்கு ஐந்தாவதாக ஆயர்வேதம் வைக்கப்படுகிறது. ஆயர்வேத சிகிச்சை அளித்த தன்வந்தரி என்ற வைத்தியர் தேவ மருத்துவன் என்று உயர்வாகப் பேசப்படுகிறார். சுஸ்சிமிர்தர் என்ற புராதன கால மருத்துவர் சத்திர சிகிச்சை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. தமிழர்களுடையே பாரம்பரிய வைத்திய முறை சித்த வைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. வாதம். புpத்தம். சிலேற்பனம் ஆகிய மூன்றும் உடலில் சமநிலையில் இருக்கும் போது சரிவிகித உடலாரோக்கியம் பேணப்படுவதாகச் சித்த வைத்தியம் கூறுகிறது. வாதம் என்றால் காற்றுஇ பித்தம் என்றால் சமிபாட்டுச் சுரப்பி; சிலேற்பனம் என்றால் உடல் குளிர்மை.

சமநிலை தவறும் போது நோய்கள் ஏற்படுகின்றன. இறுதியில் மரணம் சம்பவிக்கின்றது. இது சித்த வைத்தியக் கோட்பாடு. சித்த வைத்தியம் மிகச் சிறந்த இயற்கை வைத்திய முறை. யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் சித்த வைத்தியம் இன்றும் சீரிளிமை கெடாமல் நல்ல முறையில் இயங்குகிறது.

யாழ்ப்பாண நல்லூர் மன்னன் பரராசசேகரன் ஏழு பகுதிகள் கொண்ட சித்த வைத்திய நூலை யாத்துள்ளான். குழந்தை வைத்திய நூலான முதற் பாகம் அச்சாகியுள்ளது. தமிழர்களின் தவக்குறைவால் மிகுதிப் பாகங்கள் அச்சேறாமல் கிடக்கின்றன.

மத்திய கிழக்கு அரபு முஸ்லீம்களின் வைத்திய முறை யுனானி என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில் பெருமளவு மூலிகைகள் பயன்பாட்டில் உள்ளன இஸ்லாம் உலகில் பரவியபோது யுனானி வைத்திய முறையும் உலகின் பல பாகங்களுக்குச் சென்றது. யுனானி வைத்தியர்களை ஹக்கிம்கள் என்பார்கள்.

சிறீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் யுனானி வைத்திய முறை காணப்படுகிறது. இந்தியாஇ பாகிஸ்தான்இ வங்காள தேசம்இ போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் அதைக் காண முடியும்.

சீனப் பாரம்பரிய வைத்திய முறை. ஆங்கிலத்தில் சிரிஎம்(CTM) (Chinese Traditional Medicine) என்ற மூன்று எழுத்துக்களால் அடையாளம் காணப்படுகிறது. நோயர்களுடைய வெளித் தோற்றம்இ உடல் மணம் போன்றவற்றை நெருக்கமாக ஆராய்ந்தபின் சீனப் பாரம்பரிய வைத்தியர்கள் சிகிச்சையைத் தொடங்குவார்கள்.

நோயளர்களுடன் பேசுவது மூலம் அவர்களுடைய மனநிலைஇ உடல் நிலை என்பனவற்றைச் சீன மருத்துவர்கள் கணிப்பிடுவார்கள்.
சிறிய ஊசிகளை உடலின் நரம்பு மண்டல கேந்திர நிலைகளில் வலி ஏற்படாமல் மென்மையாகச் செலுத்தி சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது சீனப் பாரம்பரிய வைத்திய முறையில் மிக முக்கியமான பகுதி.

பாட்டி வைத்தியம் என்றும் கை மருந்து வைத்தியம் என்றும் அழைக்கப்படும் நாட்டு வைத்தியம். உடனடித் தேவைக்காக வீட்டிலும் சுற்றுப் புறத்திலும் காணப்படும் மருந்துச் சரக்குகள்இ மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த முறை வைத்தியம் மேற்கொள்ளப் படுகிறது. இது அனுபவ ரீதியான வைத்தியம்.

தாய் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குச் சொந்தமான சிகிச்சை வழி முறை. பெரும்பாலும் வீட்டில் உணவுத் தயாரிப்புக்காக வைத்திருக்கும் சரக்குகளை பாட்டி வைத்தியத்தில் பயன் படுத்துவார்கள். நன்கு பழுத்த மூதாட்டிகள் கேட்டும்இ உணர்ந்தும்இ செய்முறையால் அறிந்தும் பெற்ற வைத்திய அனுபவம் என்ற காரணத்தால் இது பாட்டி வைத்தியம் எனப்படுகிறது.
நாட்டு வைத்தியத்தில் உணவே மருந்தாகப் பயன்படுகிறது.

பாட்டிமாருடைய கண்கண்ட மூலிகையாக மிளகைக் குறிப்பிடலாம் வயிற்றுப் பொருமல்இ லேசான காய்ச்சல்இ வாயுச் சேட்டை போன்ற உபாதைகளுக்கு பாட்டி மிளகு ரசம் போட்டுத்தருவார். பூடுஇ புளிஇ மல்லிஇ மிளகுஇ வெந்தயம் சேர்ந்த ரசம் உணவும் மருந்துமாகும்.

பண்டைக் காலந் தொட்டு இற்றை வரை எமது உணவில் மிளகு முக்கிய இடம் பிடிக்கிறது. வெளி நாட்டவர்கள் எமது நாட்டு மிளகை வாங்கிச் செல்வார்கள். மிளகு கறுப்புத் தங்கம் என்று அழைக்கப்பட்டது. மிளகு பெருஞ் செல்வமாக மதிக்கப்பட்டது. 15ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன் இந்திய சமையல் முறையில் காரம் சேர்ப்பதற்கு மிளகு பயன்படுத்தப்பட்டது. மிளகாயின் வருகைக்குப்பின் காரம் சேர்க்கும் பெருளாக அது இடம் பெறத் தொடங்கியது. மிளகாயைப் போல் மிளகு உடற் பாதிப்பை ஏற்படுத்தாது. புரதம், கொழுப்பு, மாச்சத்து, நார்ச்சத்து, விற்றாமின்கள், சுண்ணாம்பு, இரும்பு, பொஸ்பரஸ் சத்துக்கள் மிளகில் நிரம்பியுள்ளன. இரத்தக் குழாயில் படியும் கொலஸர்றோல் கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிளகினால் முடியும். வீட்டுச் சமையலில் பருப்பு போன்ற கறிகளில் சேர்க்கும் போது அது மருந்தாகவும் எமக்கு உதவுகிறது

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved