|

காய்ச்சலுக்குப் பிறகு..!
ஆயுர்வேதம்
காய்ச்சல் விட்ட பிறகு,உடலுக்குப்
புஷ்டி தரும் உணவு சாப்பிடலாம் என்ற
ஆசையால்,
வாழைப்
பழம்,
பலாப் பழம்,
மாம்பழம்
பால்,
நெய் நல்ல கறிகாய்கள்
போன்றவற்றை அளவுக்கு மீறி உண்டு,
அதனால் பசி மந்தம் ஏற்பட்டு வயிறு
உப்பிக் கனத்துத் திணறும் உங்களுக்குத்
தேரையர் எனும் முனிவர்
கூறும் அறிவுரை என்ன தெரியுமா?துவரம்
பருப்பை வேக வைத்து வடிகட்டிய
நீரில் மிளகும் பூண்டும் ரசத்திற்குத்
தேவையான ரசப்பொடியும்
சேர்த்துக் காய்ச்சி ரசமாக்கிச் சாப்பிட
அந்தப் பசி மந்தமும்,
வயிறு வேதனையும் நீங்கி விடும் என்கிறார்.
புர தச்
சத்துமிக்க உணவுகளில் பருப்புகளுக்கு
முதல் இடமுண்டு. அதிலும்
துவரம் பருப்பிற்கு நம்நாட்டு உணவில் அதிக
முக்கியத்துவம்
தரப்படுகின்றது. விருந்திலும்,பத்திய
உணவிலும் இது நிச்சயம்
இடம் பெறும். விருந்தில் பருப்பு சாம்பார்,
பருப்பு உசிலி,பருப்பு
போளி,
பருப்புப் புட்டு என்றவாறும் பத்திய
உணவில் பருப்புப்
பொடி,
பருப்புத் துவையல்,
பருப்பு ரசம் என்ற வகையிலும் துவரம்
பருப்பு பயன்படுகிறது.
கடும் காய்ச்சல்,
மூட்டு வலி முதலிய
உபாதைகளால் பலநாட்கள் தொடர்ந்து
படுக்கையிலேயே கிடந்து
எழுந்திருக்கக் கூடச் சக்தியில்லாமல்
இருக்கும் உங்களுக்கு ஒரு
சிறந்த கஞ்சிமுறை இருக்கிறது.பஞ்ச
முஷ்டிக யூஷம் என்று அதற்குப்
பெயர். பஞ்ச என்றால் ஐந்து. முஷ்டிக
என்றால் ஒரு கைப்பிடி அளவு.
யூஷம் என்றால் கஞ்சி. துவரை,
உளுந்து,
கொண்டைக் கடலை,
பச்சைப்
பயறு மற்றும் பச்சரிசி ஆகிய ஐந்தையும்
வகைக்கு ஒரு கைப்பிடியளவு
எடுத்துத் தனித் தனியே நல்ல வெள்ளைத்
துணியில் முடிந்து ஒரு
பாத்திரத்தில் போட்டு அதில் சுத்தமான
தண்ணீர்
3
லிட்டர் விட்டு,அரை
லிட்டர் ஆகும் வரை காய்ச்சி,அந்தத்
துணி முடிச்சுகளை அகற்றி,
தண்ணீரை மட்டும் வெதுவெதுப்பாகச்
சாப்பிடுவதால் பசியின்
களைப்பு,பலக்குறைவு
இவற்றை எளிதில் சமாளிக்கலாம். நீடித்த
உபவாசங்களுக்குப் பின் கனத்த உணவு ஏற்க
முடியாத நிலையிலும்,உப்பில்லாப்
பத்திய நிலையிலும் இந்தக் கஞ்சி
குடிப்பது மிகவும்
நல்லது. இயற்கையான புரதச் சத்துமிக்க
உணவாக இது ஏற்றுக்
கொள்ளத்தக்கது.
பருப்பு வகை அதிகமாகச்
சேர்ந்திருந்தாலும் வெந்த பருப்புகளின்
திரவம் மட்டுமே சேர்வதால்
குடலில் வாயு கொள்வதில்லை. இந்தக் கஞ்சி
சிறிது துவர்ப்பும்
இனிப்புமாக இருக்கக் கூடியது.மலத்தை
இளக்காமல் கட்டும். பித்த கப
நோய்களுக்கு மிகவும் ஏற்றது.நல்ல ரத்த
விருத்தி தரும். தோலின்
மென்மையும் பளபளப்பும் பூச்சும் இதனால்
அதிகமாகும்.
நீங்கள்
புலால் உணவு வகைகளைச் சாப்பிட வேண்டிய
கட்டாயம் ஏதுமில்லை.
மேற்குறிப்பிட்ட பருப்பு வகைகளைத் தனியே
வேக வைத்து,தண்ணீர்
சுண்டியதும்,
அப்படியே பருப்பைச் சுண்டல் போலச்
சாப்பிடுவது,
கறிகாய்களை வேக வைத்து அத்துடன் கலந்து
சமைத்து உண்பது என்ற வகையில்
தினமும் உணவில்
5-15
சதவிகிதம் வரை பருப்புகளை நாம் உணவில்
சேர்க்க முடியும். புலால்
உண்ணாதவர்களுக்கும் புலால் உணவினால்
ஏற்படும் புஷ்டிக்கு நிகரான புஷ்டியை
பருப்பில் பெற முடியும்.
ஆனாலும் அளவிற்கு மீறிய பருப்பைச்
சேர்த்துக் கொள்ளும்போது அதைச்
செரிக்கத் தேவையான தாபமானம்
இல்லாமலிருந்தால் ஜீரணமாகத்
தாமதமும்,
அந்தத் தாமத்தால் ஏற்படும்
நுதநுதப்பினால்
குடலிலுள்ள பருப்பில் அழுகல் ஏற்பட்டு,
அந்த அழுகிப் போன
பருப்பிலிருந்து வாயு உண்டாகிறது. அந்த
வாயுவே வயிற்று
உப்புசத்திற்குக் காரணமாகலாம்.அதனால்
தாபமானம் உங்களுக்கு
மிகவும் முக்கியம் என்பதால்,
கோரைக் கிழங்கு
10
கிராம்,
பர்ப்பாடகப்புல்
5
கிராம் வீதம்
1
லிட்டர் தண்ணீரில் போட்டு அரை
லிட்டர் ஆகும் வரை காய்ச்சி,
வடிகட்டி,
சிறிது சிறிதாக ஒரு நாளில்
குடித்து வந்தால்,காய்ச்சல்
விரைவில் விடுவதோடு,
குடலில்
தேவையான சூட்டையும் பாதுகாக்கும்.
இந்தக் குடல் சூடுதான்
தாபமானம்.பருப்பு வகைகள் சரியே
ஜீரணமானாலும் பின் நிலைகளில்
உணவுச் சத்து ரத்தத்துடன் சேர்ந்ததும்
கல்லீரலும்
சிறுநீரகங்களும் அதிகம் உழைக்க
நேரிடுவதால்,
பருப்புகளை
அளவுடன் சேர்த்து உண்பதே நல்லது பசி
நன்றாக எடுக்கத்
தொடங்கிவிட்டால் நீங்களும் வீட்டிலுள்ள
மற்றவர்களைப் போல்
சாதாரண தினப்படி சாப்பிடும் உணவுகளை
சாப்பிடத் தொடங்கலாம்.
|